Evening Digest 30 August 2024 : இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், பருப்பு வாங்க அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு:
- சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாளை வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டி நடைபெற உள்ளது.
- திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
- இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.
- வருகிற 5ஆம் தேதி திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், பருப்பு வாங்க அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தியா:
- ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் எனவும், அக்டோபர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுவாச பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 3 நாட்கள் பயணமாக அடுத்த மாதம் அமெரிக்க செல்ல உள்ளார்.
- பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சமூகத்தில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகர் மோகன்லால் மவுனம் கலைத்துள்ளார். நான் எங்கேயும் ஒடி ஒளியவில்லை என்றும் இங்கேயேதான் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
- அரசு முறை பயணமாக புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி. இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
உலகம்:
- பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
- அமெரிக்காவில் கூகுள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவர்கள் திறன்களை பெற செய்யும் இலக்குடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
- போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் போர் இடை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு:
- மாற்றுத்திறனாளிகளுக்ககான 17வது பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் இந்திய வீராங்கணை வெண்கலாம் பதக்கம் வென்றுள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மணி வீரர் ஸ்வரேவ் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.