Evening Digest 29 August 2024: பிரம்மாண்ட முதல் மாநாட்டை அறிவித்த தவெக.. இன்றைய டாப் 10 செய்திகள்..
News of the day | உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள்: இன்று காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விக்கரவண்டியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு :
- இன்று (29-08-2024) காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (30-08-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி கைது செய்யப்பட்டுள்ளார். போக்ஸோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 பேர் கொண்டுள்ள அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விக்கரவண்டியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு ஒப்புதல் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
- மலையாள சினிமாவை போல தமிழ் சினிமாவில் எந்த வித பாலியல் புகார்களும் வரவில்லை என தெரிவித்துள்ள செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், அவ்வாறு புகார்கள் வரும் பட்சத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- சென்னையில் நாளை (30.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அண்ணாநகர் மேற்கு, பஞ்செட்டி மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Shocking News : மூதாட்டி மற்றும் சிறுவன் மீது காவலர்கள் கொலைவெறி தாக்குதல்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி!
இந்தியா :
- குஜராத்தில் கடந்த மூன்று நாட்களாக அங்கு தொடர் மழை பதிவாகி வருகிறது. கனமழையால் குஜராத் மாநிலமே வெள்ளக்காடாய் மாறியுள்ளது. இதில் சிக்கி தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. வைரஸால் 245 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 82 பேர் உயிரிழந்ததாகவும், இதன் விளைவாக 33% இறப்பு விகிதம் ஏற்பட்டதாகும் தெரிவித்துள்ளது.
விளையாட்டு :
- இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பேட்டிங் செய்யும்போது உணர்ச்சிகளை காட்டுவதற்கும், ஒரு ஜாம்பவான் ஆவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. சுப்மன் கில் இந்த நிலையை எட்டுவது மிகவும் கடினம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ராட்சத முதலைகள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
வைரல் :
- குஜராத்தில் கொட்டித் தீர்து கனமழையின் காரணமாக மழை வெள்ளத்தில் எருமை மாடுகள் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது குஜராத்தின் குடியிருப்பு பகுதிகளில் 15 அடி நீள முதலை சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய பிரதேச மாநிலம் காத்னி மாவட்டத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் மூதாட்டி மற்றும் அவரது 15 வயது பேரன் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.