Evening Digest 26 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து செந்தில் பாலாஜி இன்று விடுதலையானார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றையிறும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் புனித நீராடும்போது ஆற்றில் மூழ்கி 43 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு:
- சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விரிவாக படிக்க
- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றையிறும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க
- தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்த விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதோடு, 33 நிபந்தனைகளில் அதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று விழுப்புரம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. விரிவாக படிக்க
- வார இறுதி நாட்கள் மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னையில் இருந்து 180 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
- சென்னை மெட்ரோ ரயில் நிதி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். நாளை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மெட்ரோ ரயில் நிதி விவகாரம் தொடர்பாக பேச உள்ளார்.
Also Read: பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை.. அதிர்ச்சி காரணம்.. மதுரையில் பயங்கரம்!
இந்தியா:
- பீகார் மாநிலத்தில் புனித நீராடும்போது ஆற்றில் மூழ்கி 43 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிவித்புத்ரிகா விழாவில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் புனித நீராடும்போது ஆற்றில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விரிவாக படிக்க
- திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இளம்பெண்ணை 50 துண்டுகளாக கொலை செய்த கொலையாளி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கொலை செய்ததற்கான காரணத்தை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் நேற்று இரண்டாவது கட்ட தேர்தல் நடந்தது. 6 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் சுமார் 57.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
உலகம்:
- லெபனான்-இஸ்ரேல் எல்லையில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 21 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என அமரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
- லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், சிரியா நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் 23 உயிரிழந்துள்ளனர். இவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தை நோக்கி தாக்குதல் நடத்தியதை அடுத்து உயிரிழந்தனர்.
- தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
விளையாட்டு:
- ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற சமீபத்தில் கலந்துகொண்ட பல நிகழ்ச்சிகளில் தான் வென்ற பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்களை அணிந்து சென்றுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ட்ரோல் செய்துள்ளனர். இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதில் அளித்துள்ளார். விரிவாக படிக்க
- பிரக்ஞானந்தாவுக்கு விபூதி வைக்கும் பழக்கம் சின்ன வயதில் இருந்தே இருக்கிறது. பாட்டி உள்ளிட்டவர்கள் பழக்கி விட்ட அந்த பழக்கம் இன்றளவும் இடைவிடாமல் தொடர்கிறது என்று அவரது அக்கா வைஷாலி கூறியுள்ளார். விரிவாக படிக்க
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.