Evening Digest 26 August 2024 : நாளை அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்.. இன்றைய டாப் 10 செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாளை ஒரு நாள் மதுரை முதல் தாம்பரம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி சிலை சிலை இன்று திடீரென சரிந்து விழுந்து சுக்குநூறானது. தெற்கு ரஷ்யாவின் சரடோவ் பகுதியில் இன்று அதிகாலை உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் பல உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்தன.
தமிழ்நாடு:
- நாளை ஒரு நாள் மதுரை முதல் தாம்பரம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு புறப்பட உள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மூத்த அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
- தமிழ்நாட்டில் நாளை (27.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.
- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 1 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது என்றும் இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை மாநில தலைவராக நியமித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்று செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரு.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியா:
- மகாராஷிடிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி, மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை இன்று திடீரென சரிந்து விழுந்து சுக்குநூறானது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆகஸ்ட் மாதம் முடிவடையும் நிலையில், செப்டம்பரில் இருந்து மக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடைபெற உள்ளன. இந்த மாற்றங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையிலிருந்து புதிய கிரெடிட் கார்டு விதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி பற்றிய சாத்தியமான அறிவிப்புகள் வரை இருக்கும்.
- கேரள திரைத்துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம் என்று மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உலகம்:
- தெற்கு ரஷ்யாவின் சரடோவ் பகுதியில் இன்று அதிகாலை உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் பல உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேல் மீது வரும் காலங்களில் தொலைதூர ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா எச்சரிச்சை விடுத்துள்ளது.
- ஏமன் கடற்கரை அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
விளையாட்டு:
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் டெஸ்ட் போட்டி தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானை தனது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை வங்கதேச அணி பெற்றுள்ளது.
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.