5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 23 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 23 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Sep 2024 22:03 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தொண்டர்களுக்கு த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச சாராய வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சிறார்கள் ஆபாச படங்களை பார்ப்பதும், பதிவிறக்கம் செய்வதும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தமிழ்நாடு:

  • தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தொண்டர்களுக்கு த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளார். விரிவாக படிக்க.. 

 

  • இன்றும், நாளையும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க

 

  • ஆம்ஸ்டாங்கை கொல்ல ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் நண்பரான ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-
  • கள்ளக்குறிச்சி விஷச சாராய வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
  • சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் முழுமையாக ரத்து செய்ய்ப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
  • தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Also Read: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை!

இந்தியா:

  • திருப்பதி லட்டின் புனிதம் கேட்டுள்ளதாக தோஷம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு பரிகாரமாக இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் தேவஸ்தானம் கூறியுள்ளது. ஓம் நமோ வெங்கடேசாய என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.
  • சிறார்கள் ஆபாச படங்களை பார்ப்பதும், பதிவிறக்கம் செய்வதும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
  • சிறார்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை சேமித்து வைத்து டெலிட் செய்தாலும் குற்றம் தான் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.
  • திருப்பதி லட்டில் விலங்கு கொழுங்கு கலக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை குழு அமைக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
  • மசோதாக்களை காரணமின்றி ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாகவும், மசோத்தாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
  • ராமரின் செருப்பை வைத்து பரதன் அயோத்தியை ஆட்சி செய்தது போல 4 மாதங்கள் டெல்லியை ஆட்சி செய்வேன் என்று டெல்லி முதல்வர் அதிஷி தெரிவித்துள்ளார்.

உலகம்:

  • லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 400 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
  • இலங்கையில் 9வது அதிபராகஅனுரா குமார திசநாயகே இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கையில் தலைமை நீதிபதி ஐயந்த் ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் சென்ற சோயுஸ் எம்எஸ்-25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானின் கசாக் புல்வெளியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

Also Read: கவனிங்க மக்களே.. 2 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட்?

விளையாட்டு:

  • இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருதலைப்பட்ச வெற்றியை கருத்தில் கொண்டு, பிசிசிஐ இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஒரு மாற்றமும் செய்யவில்லை.
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணியும், இந்திய மகளிர் அணியும் தங்கம் பதக்கம் வென்று வரலாறு படைத்தன. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணிகள் தங்கம் வெல்வது இது முதல் முறையாகும்.

 

Latest News