Evening Digest 02 October 2024: அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழை.. இன்றைய டாப் 10 செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மட்டுமல்லாமல், வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை வழங்குகிறோம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
தமிழ்நாடு
- அரசு சட்ட கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அரசு தரப்பில் சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விரிவாக படிக்க..
- வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3 வது வாரத்தில் ( அக்டோபர் மத்தியில் ) தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மனடல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தென் தமிழகத்தில் குறைவாகவும் வட தமிழகத்தில் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க..
- விமானப்படை சாகச நிகழ்ச்சியை முன்னைட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் ரெட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. 92 வது இந்திய விமானப்படையில் ஆண்டு விழாவை ஒட்டி வருகின்ற 6 தேதி விமானப்படையில் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற ஒத்திகையில் ரபேல், தேஜஸ், உள்ளிட்ட இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டது. விரிவாக படிக்க..
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையை பயன்படுத்தி சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையை பின்பற்றி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். விரிவாக படிக்க
- விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் மது அருந்திவிட்டு தொல்லை கொடுத்து வந்த மகனை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதி பொம்மை நாயக்கர் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. விரிவாக படிக்க
இந்தியா
- தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல் களத்தில் இறங்கிய பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் தனது அரசியல் கட்சியை முறைப்படி அறிவித்தார். ஜன் சூரஜ் அபியான் மூலம் பீகாரில் இரண்டு ஆண்டுகள் நடைபயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தொடங்க பிரசாந்த் கிஷோர் முடிவு செய்துள்ளார். விரிவாக படிக்க
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டியளித்துள்ள அவர், “பக்தர்களுக்கு நிச்சயம் திருப்தி அளிக்கும் வகையில் ஏழுமலையான் தரிசனத்தை ஆந்திர அரசு ஊக்குவிக்கும்” எனவும் தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க..
- காந்தி ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் 2 ஆம் தேதி கொண்டாடப்படுவது என்பது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் கூட தெரியும். ஏன் காந்தி அனைவருக்கும் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார் என்பது பற்றி நாம் காணலாம். . மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரில் மோகன்தாஸ் கரம்சம் காந்தி பிறந்தார். விரிவாக படிக்க
- உத்தர பிரதேசத்தில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வெளியே அமர வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேதி குறிப்பிடப்படாத அந்த விடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. விரிவாக படிக்க
உலகம்
- கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த பயங்கர தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல், ஹமாச் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. விரிவாக படிக்க..
- இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேலுக்கு உதவுமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைரன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க