5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 01 October 2024: இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள்.. டாப் 10 செய்திகளாக இதோ!

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மட்டுமல்லாமல், வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை வழங்குகிறோம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 01 October 2024: இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள்.. டாப் 10 செய்திகளாக இதோ!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 01 Oct 2024 20:38 PM

அக்டோபர் 1 ஆம் தேதியான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

தமிழ்நாடு

  • தமிழக அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் மற்றும் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்புகள் வழங்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது. விரிவாக படிக்க
  • தமிழகத்தின் பிரபல சுற்றுலாத்தலமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இரு மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு நேற்று நிறைவடைந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க 
  • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. நாம் தமிழர் கட்சியில் யாரும் வளரக்கூடாது என சீமான் நினைப்பதாகவும், இதனால் அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்த பிறகு நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் சரியாக இல்லை எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விரிவாக படிக்க
  • தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயத்தில் இருந்து ரத்தம் வெளியேறும் நாளத்தில் வீக்கம் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை இல்லாத சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டண்ட் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினியின் உடல் நலம் சீராக இருப்பதாகவும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க
  • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தகவல் தொழில்நுட்ப பிரிவு டிஜிட்டல் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் . அப்போது தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். இதில் ஒரு செல்போன் பறந்து வந்து எடப்பாடி பழனிசாமி மேல் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரிவாக படிக்க
  • குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 5  நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க 
  • திருப்பதி திருக்குடை ஊர்வலம் காரணமாக சென்னையில் வால்டாக்ஸ் சாலை, என்எஸ்சி போஸ் சாலை, மின்ட் சாலை, சூளை ரவுண்டானா, சூளை நெடுஞ்சாலை, உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். விரிவாக படிக்க

இந்தியா

  • கேரளாவின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆரிப் முகமது கானின் சால்வையில் தீப்பிடித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார். அப்போது காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர் அங்கிருந்த குத்து விளக்கை ஏற்ற முற்பட்டபோது அவரது சால்வையில் தீப்பிடித்தது. இதில் ஆளுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மேலும் படிக்க

  • உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஐபோன் டெலிவரி செய்ய சென்ற இளைஞர் இரு நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் ஒன்றை லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஆர்டர் செய்த கஜனன் என்ற  கேஷ் ஆன் டெலிவரி ஆப்சனை தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஐபோன் டெலிவரி செய்யும் ஊழியரை தனது இடத்திற்கு வரவழைத்த கஜனன் அவரை தன் நண்பருடன் இணைந்து கொலை செய்துள்ளார். விரிவாக படிக்க
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 3 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில் ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு பலனாய்வு குழு தனது விசாரணை நிறுத்தி வைத்துள்ளது.

உலகம்

  • தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங் நகரில் வடக்கே ஒத்தை தனி மாகாணத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. கல்வி சுற்றுலாவுக்காக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என 44 பேர் உள்ளே இருந்த நிலையில் அந்த பஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. இதில் 25 மாணவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

விளையாட்டு

  • வங்க தேசத்திற்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது. கடந்த 27ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்கிய நிலையில் முதல் நாளிலிருந்து மழை பெய்ய தொடங்கியது. இதனால் இரண்டாவது மற்றும் மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் வங்கதேசம் அணி தொடர்ந்து பேட்டிங் செய்து இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதனைத்தொடர்ந்து மூன்று விக்கெடுகள் மட்டுமே இழந்து இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. விரிவாக படிக்க

Latest News