Evening Digest 18 September 2024: இன்றைய டாப் 10 செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
Top News | இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். திமுக முன்னாள் அமைச்சர் சுந்தரம் திடீர் உடலநலக் குறைவால் காலமானார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும் பல்வேறு செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இதையும் படிங்க : Ex Minister : முன்னாள் அமைச்சர் சுந்தரம் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி!
தமிழ்நாடு :
- திமுகவின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளருமான க.சுந்தரம் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. உடல்நலக் குறைவால் உயிரிழந்த அமைச்சரின் உடல், அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், பெரியார் திடலில் மரியாதை செலுத்தியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும் நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : IND vs BAN 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்! இந்தியாவின் பிளேயிங் லெவனில் இவர்களுக்கு வாய்ப்பா?
- தமிழகத்தின் துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், துணை முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா என்பவர், மதம் மாற சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்ட நிலையில், மாணவியின் தற்கொலைக்கு மத மாற்ற கட்டாயம் காரணம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
- சென்னையின் பிரபல ரவுடியான பாலாஜி என்கிற காக்கா தோப்பு பாலாஜியை போலீசார்வ் கைது செய்ய முயற்சி செய்தபோது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த நிலையில் தற்காப்புக்காக காவல்துறை அவரை சுட்டதில் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார்.
- சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, ரெட்ஹில்ஸ், அத்திப்பட்டு புது நகர் மற்றும் டிஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ’கோட்’ படத்திலிருந்து வெளியானது ‘சின்ன சின்ன கண்கள்’ வீடியோ பாடல்
இந்தியா :
- ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்த 24 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 219 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில ஆண்டுகளாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது அந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த சுமார் 18,626 பக்கங்களை கொண்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகம் :
- லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்ததில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சுமார் 2,800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்!
பொழுதுபோக்கு :
- வயது மூப்பு காரணமாக பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- பாலியல் புகாருக்கு உள்ளான திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்திலிருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வணிகம் :
- செப்டம்பர் 18 ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.120 குறைந்து ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.6,850-க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க : One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை!
விளையாட்டு :
- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024ன் ஹாக்கி இறுதிப்போட்டியில் இன்று சீனா மற்றும் இந்திய ஹாக்கி அணிகள் மோதின. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, சொந்த மண்ணில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 5வது முறையாக கோப்பை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை வென்றது.
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.