Evening Digest 07 August 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கியச் செய்திகளை பார்ப்போம். வரும் 16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். வன்முறை களமாக உள்ள வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்கிறது.
தமிழ்நாடு:
- வரும் 16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- அதிமுக குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் அப்பாவு செப்டம்பர் 9ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை போலீசார் இன்று கைது செய்யப்பட்ட நிலையில்,
அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். - வரும் 27ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க செல்ல உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூடுகிறது.
- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
- வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
- மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 எம்.பி பதவி இடங்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி ஆளுநராக கைலாசநாதன் பதவியேற்றுள்ளார். புதுச்சேரி ஆளுநராக பொறுப்பேற்ற கைலாசநாதனுக்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- வன்முறை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், வங்கதேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
- புனேவில் ஜூன் மாதம் முதல் 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உலகம்:
- வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்கும் எனறு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இடைக்கால அரசின் பதவியேற்பு விழா நாளை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
- நேபாள நாட்டின் காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட ஹெரிகாப்டர் ஒன்று வடமேற்கு மலை பகுதியில் சென்றபோது விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விளையாட்டு:
- பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் கொண்டு வர வேண்டும் என்ற இந்தியாவின் கனவு நிறைவேறாத கனவாக அமைந்தது.
- வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.
- இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான 27 வருடங்களுக்கு பிறகு ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது.
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.