5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 05 September 2024: பாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா.. இன்றைய டாப் 10 செய்திகள்..

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பரபரப்பான ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் அதனை நாம் பார்த்திருக்க இயலாது. எனவே இன்றைய நாளின் நிகழ்வை மிக சுருக்கமாக காணலாம். இந்த தொகுப்பில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள்,  தி கோட் சிறப்பு காட்சிக்கு அனுமதி, காலாவதியான சுங்கச்சாவடிகள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

Evening Digest 05 September 2024: பாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா.. இன்றைய டாப் 10 செய்திகள்..
இன்றைய டாப் 10 செய்திகள்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 05 Sep 2024 23:08 PM

முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பரபரப்பான ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் அனைத்தையும் நாம் பார்த்திருக்க இயலாது. எனவே இன்றைய நாளின் நிகழ்வை மிக சுருக்கமாக காணலாம். வேலூர் மாவட்டத்தில், இரண்டாவது பெண் குழந்தை என்பதால் பிறந்த 9 நாட்களே ஆன குழந்தையை விஷப்பால் ஊற்றி தம்பதி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பள்ளி வாகனம் மீது அரசு போக்குவரத்து கழக பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு:

  • முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தனி சட்டப்பிரிவு இல்லாவிட்டாலும், அரசியலமைப்பு உரிமையின்படி மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • வேலூர் மாவட்டத்தில், இரண்டாவது பெண் குழந்தை என்பதால் பிறந்த 9 நாட்களே ஆன குழந்தையை விஷப்பால் ஊற்றி தம்பதி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வரும் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை கண் மை டப்பாவை விழுங்கி ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • பெண் டிஎஸ்பி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பணியில் உள்ள போலீசார் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா:

  • கர்நாடகாவில் பள்ளி வாகனம் மீது அரசு போக்குவரத்து கழக பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார்.
  • ஜாபர் சாதிக்கில் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
  • ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி எந்த வங்கியிலும் பணம் பெறலாம் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • மலையாள திரையுலகில் பெரும் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: பள்ளி வாகனம் மீது மோதிய அரசு பேருந்து.. 2 மாணவர்கள் உயிரிழப்பு

உலகம்:

  • கடன் நெருக்கடியில் உள்ள ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சீனா அதிபர் ஜீ ஜின் பிங் மேலும் 51 பில்லியன் டாலர் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தையத்தில் கலந்துக்கொண்ட உகாண்டா வீராங்கனை ரெபாக்கா செப்டேஜி காதலனாள் நடு ரோட்டில் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
  • வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் இரண்டு கொலை வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனால் ஷேக் ஹசீனா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது.

விளையாட்டு:

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஜோஸ் பால்டர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பில் சால்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மாற்றத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஜூடோவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார் கபில் பர்மார்.

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News