Evening Digest 05 August 2024 : வங்கதேச பிரதமர் ராஜினாமா செய்தார்.. இன்றைய டாப் 10 செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள் : வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை சரசரவென சரிந்தது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வெல்வதை லக்ஷயா சென் தவறவிட்டார்.
தமிழ்நாடு :
- கட்சி ஆர்பாட்டத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐபிஎஸ், எஸ்பி, டிசி வேலை குறித்தும் அவதூறாக பேசிய நிலையில், திருச்சி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் வருண் குமாரும் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. எழும்பூர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், ஆயிரம் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை வரை மழை பெய்தது.
- சென்னையில் வரும் 15ஆம் தேதி சுதந்தர தினவிழா சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது. இதையொட்டி சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது. இதையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல வருகிற 9,13 ஆகிய தேதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, கே.கே.நகர், தியாகராய நகர், அண்ணாநகர், அம்பத்தூர், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், பட்டாபிராம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மிந்தடை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Bangladesh Protest : இந்தியாவில் தஞ்சமடைந்த வங்கதேச பிரதமர்.. மோடி, ராகுல் அவசர ஆலோசனை!
இந்தியா :
- வங்கதேசத்தில் போராட்டக்காரர்களிடன் ஆட்சியை பரிகொடுத்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெயசங்கரை சந்தித்து பேசினார்.
பொழுதுபோக்கு :
- நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான ‘போட்’ படத்திலிருந்து ’சோக்கா நானும் நிக்கிறேன்’ என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போட்’. இந்தப் படத்தில் யோகி பாபு உடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
- ராயன் படத்திலிருந்து ‘வாட்டர் பாக்கெட்’ என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க : Lakshya Sen: வெண்கலத்தை தவறவிட்ட லக்ஷயா சென்.. இந்தியாவுக்கு 4வது பதக்கம் மிஸ்..!
வணிகம் :
- வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை பங்குச்சந்தை திறக்கப்பட்டதுமே சரசரவென சரிந்தது. பிஎஸ்இயின் 30-பங்கு சென்செக்ஸ் திங்களன்று 79,700.77 ஆகத் தொடங்கியது, அதன் முந்தைய முடிவோடு ஒப்பிடும்போது 1200 புள்ளிகள் மோசமாக சரிந்தது, தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி -50 424 புள்ளிகள் சரிந்தது. வெள்ளியன்று சென்செக்ஸ் 885.60 புள்ளிகள் சரிந்து 80,981.95 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேசமயம் நிஃப்டி 50 பற்றி பேசினால், அது 293.20 புள்ளிகள் சரிந்து 24,717.70 அளவில் நிறைவடைந்தது.
- கடந்த வெள்ளிக்கிழமை ((02.08.2024) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,450க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.51,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதியான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
விளையாட்டு :
- 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வெல்வதை லக்ஷயா சென் தவறவிட்டார். இதன்மூலம், இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய 4வது பதக்கம் மிஸ் ஆனது. உலக தரவரிசையில் நம்பர்-2 வீரரும், 2020 டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்செல்சனுக்கு எதிரான அரையிறுதியில் லக்ஷயா சென் கடுமையான போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் நோவா லைல்ஸ் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம், ஆக்டிவ் வீரர்களில் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்ற சாதனை படைத்தார்.
இதையும் படிங்க : Stock Market Crash : பங்குச்சந்தை திடீர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? வரும் நாட்கள் எப்படி இருக்கும்? முழு விவரம்
வைரல் :
- மஹாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள காட் பகுதியில், 29 வயது இளம் பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் தவறி 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், கயிறு மூலம் இளம் பெண்ணை காப்பாற்றினர்.
காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.