Evening Digest 04 September 2024: உங்களை சுற்றி இன்றைய நாளில் நடந்தது என்ன? – இன்றைய டாப் 10 செய்திகள்!
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பரபரப்பான ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் அதனை நாம் பார்த்திருக்க இயலாது. எனவே இன்றைய நாளின் நிகழ்வை மிக சுருக்கமாக காணலாம். இந்த தொகுப்பில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள், தி கோட் சிறப்பு காட்சிக்கு அனுமதி, காலாவதியான சுங்கச்சாவடிகள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பரபரப்பான ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் அதனை நாம் பார்த்திருக்க இயலாது. எனவே இன்றைய நாளின் நிகழ்வை மிக சுருக்கமாக காணலாம். இந்த தொகுப்பில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள், தி கோட் சிறப்பு காட்சிக்கு அனுமதி, காலாவதியான சுங்கச்சாவடிகள், பிக்பாஸில் விஜய் சேதுபதி உள்ளிட்ட உள்ளூர் முதல் உலகம் வரையிலான முக்கிய நிகழ்வுகளை காணலாம்.
தமிழ்நாடு:
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- போதைப்பொருட்களை ஒழித்து மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- நடிகர் விஜய் நடித்து கோட் படத்துக்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் – சென்னையில் எப்போது ஒன்றாக சைக்கிள் ஓட்டலாம் என ராகுல் காந்தி கேட்டார். எப்போது வேண்டுமானாலும் ரெடி என முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
- அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் எதிரொலி – பணியில் உள்ள போலீசார் லத்தி வைத்திருக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்
- நடிகர் கமல் விலகிய நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
- மடாதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நித்தியானந்தா காணொளியில் ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகாததால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா:
- ஜம்மு காஷ்மீர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களை வெற்றிப் பெற வைக்க பாஜக முயற்சிப்பதாக உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
- ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி எந்த வங்கியிலும் பணம் பெறலாம் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
- பாரா ஒலிம்பிக்கில் குவியும் பதக்கங்களால் இந்தியா பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- மலையாள திரையுலகில் பெரும் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுகிறது.
- வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக தன்னுடைய ஒருமாத எம்.பி. ஊதியத்தை ராகுல்காந்தி வழங்கினார்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு தொடர்ந்து திரைத்துறையினர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
உலகம்:
- நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.
- வடகொரியாவில் வெள்ளத்தால் 1000 பேர் இறந்தத நிலையில் கடமை தவறிய 30 அதிகாரிகளை அதிபர் கிம் ஜோங் உன் தூக்கிலிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
- அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி தீப்பிடித்த விபத்தில் 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா அதிக தங்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.
- வங்கதேசம் அணியிடம் டெஸ்ட் தொடரை முழுவதுமாக தோற்றதால் பாகிஸ்தான் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்துள்ளது.