Evening Digest 03 September 2024: தீபாவளி சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள்..இன்றைய டாப் 10 செய்திகள்..
முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தீபாவளி சிறப்பு ரயில்கள், தமிழகத்தில் நாளை மின் தடை, பெண் டிஎஸ்பி மீது தாக்குதல், விஜய் பட டிக்கெட், பிரதமர் மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் பயணம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேதி அறிவிப்பு, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை இதில் சுருக்கமாக காணலாம். தமிழ்நாடு: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் […]
முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தீபாவளி சிறப்பு ரயில்கள், தமிழகத்தில் நாளை மின் தடை, பெண் டிஎஸ்பி மீது தாக்குதல், விஜய் பட டிக்கெட், பிரதமர் மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் பயணம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேதி அறிவிப்பு, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை இதில் சுருக்கமாக காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சென்னை, விருதுநகர், சேலம், திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
- பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
- அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட விவாகரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
- கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கம் – அதேபோல தீபாவளி வரை திருநெல்வேலி-மேட்டுப்பாளையம், திருநெல்வேலி-சென்னை எழும்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
- டிக்கெட் முன்பதிவில் நடிகர் விஜய்யின் கோட் படம் புதிய சாதனைப் படைத்துள்ளது.
இந்தியா:
- பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை 3 நாள் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூருக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தன் மீதான பாலியல் புகாருக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக நிவின் பாலி உள்ளிட்ட ஆறு பேர் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.
- பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதா மேற்குவங்கத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷூக்கு 8 நாட்கள் நீதிமன்றகாவல் அளிக்கப்பட்டுள்ளது.
- ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர், உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உலகம்:
- தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- புரூனே சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சீனாவில் மாணவர்கள் மீது பஸ் மோதிய சம்பவத்தில் 10 பேர் பலியானதால் பலரும் சோகமடைந்துள்ளனர்.
- காங்கோ நாட்டில் சிறையில் இருந்து தப்ப முயன்றபோது ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர்.
விளையாட்டு:
- பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் வங்கதேசம் வெற்றி பெற்று முதல்முறையாக தொடரை கைப்பற்றியது.
- மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2025 ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.