5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு… எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா?

உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.  நீதிமன்றத்தின் உத்தரவு நேற்று முடிவடைந்த நிலையில், மறு உத்தரவு இ-பாஸ் நடைமுறை தொடரும் என ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பிரத்யே இணையதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளவும் ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

ஊட்டி, கொடைக்கானலுக்கு  இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு… எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா?
கொடைக்கானல்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Oct 2024 12:29 PM

உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் விளங்குகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். குறிப்பாக கோடை காலங்கள், பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கமாக இருப்பதை விட அதிகமாக இருக்கும்.

இ-பாஸ் நடைமுறை மீண்டும் நீட்டிப்பு:

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

Also Read: சென்னையில் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த ரூட் தெரியுமா? செக் பண்ணுங்க!

சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய உத்தரவின்படி, ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கடந்த மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அன்று முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை சுற்றுலா பயணிகள் கடைபிடித்து வருகின்றனர். நீதிமன்றத்தின் உத்தரவு நேற்று முடிவடைந்த நிலையில், மறு உத்தரவு இ-பாஸ் நடைமுறை தொடரும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

இதே உத்தரவையும் கொடைக்கானல் ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை என்று ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பிரத்யே இணையதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளவும் ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

இ-பாஸ் பெறுவது எப்படி?

https://epass.tnega.org/ என்ற இணையதளம் மூலம்  உங்கள் பயணத்திற்கான இ-பாஸை பெற்றுக் கொள்ளலாம்.  வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய இ.மெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும்.

Also Read: தமிழக அமைச்சரவையில் முந்திய உதயநிதி.. சீனியர்களை பின்னுக்கு தள்ளிய துணை முதல்வர் பதவி!

ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை உள்ளீட் submit என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு உங்கள் இ-பாஸ் சான்று வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News