5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay: விஜயின் புதிய கட்சி – முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு சவாலாக இருக்குமா? உண்மை என்ன? ஓர் அலசல்..

த,வெ.க கொடி வாகை மலர் நடுவில் இருக்கும் நிலையில் அதனை சுற்றி பல்வேறு வண்ணங்களிலான 28 மாநிலங்களை குறிக்கும் வகையில் நட்சத்திரம் உள்ளது போல கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாகை மலருக்கு இரண்டு பக்கமும் யானைகள் இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி ஆசீர்வாதம் வழங்கும் வகையில் பிளிரும்படியான காட்சிகளும், பின்னணியில் மஞ்சள், சிவப்பு வண்ணம் கலந்தும் இடம் பெற்றுள்ளது.

TVK Vijay: விஜயின் புதிய கட்சி – முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு சவாலாக இருக்குமா?  உண்மை என்ன? ஓர் அலசல்..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 26 Aug 2024 17:35 PM

த.வெ.க விஜய்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். இதனால் திரையுலகம் மட்டுமல்லாது அரசியல் உலகமும் பரபரப்புக்குள்ளானது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்ற குறிக்கோளுடன் விஜய் செயல்பட்டு வருகிறார். முதலில் அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு வாழ்த்துகள் மட்டுமே தெரிவித்து வந்த அவர், யாரும் எதிர்பாராத வகையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்த சம்பவத்தில் முதல் ஆளாக தமிழ்நாடு அரசுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது.

வாகை மலர் நடுவில் இருக்கும் நிலையில் அதனை சுற்றி பல்வேறு வண்ணங்களிலான 28 மாநிலங்களை குறிக்கும் வகையில் நட்சத்திரம் உள்ளது போல கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாகை மலருக்கு இரண்டு பக்கமும் யானைகள் இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி ஆசீர்வாதம் வழங்கும் வகையில் பிளிரும்படியான காட்சிகளும், பின்னணியில் மஞ்சள், சிவப்பு வண்ணம் கலந்தும் இடம் பெற்றுள்ளது. இந்த கொடி அறிமுக நிகழ்ச்சி இந்திய அளவில் ட்ரெண்டானது. விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் கட்சியில் கொள்கை கோட்பாடுகள், கொடிக்கான காரணம் என்ன என்பதெல்லாம் தெரியப்படுத்துவோம் எனவும் விஜய் கூறினார்.

இந்த கொடி அறிமுக விழாவில் கொடியின் பாடல் வெளியானது. வெளியான சிறுது நேரத்திலேயே மிகவும் வைரலானது. இந்திய அளவில் படு டிரெண்டிங் ஆனது. இந்த பாடல் மூலம் விஜயின் கொள்கை கோட்பாடுகள் தெரிய வந்துள்ளது. அதே வேலையில், கட்சி தொண்டர்களையும் ஒன்றினைக்கும் வகையில் அமைந்துள்ளது. திரையுலகில் ஜாம்வான்களான கமல், ரஜினி அரசியலில் நுழைந்ததை பார்த்ததுண்டு. ஆனால் அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் சுவைத்த வெற்றிக்கனியின் ரகசியத்தை இதுவரை யாரும் பார்க்கவில்லை என்பதே நிதர்சனம்.

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த், இரண்டு முறை எம்எல் ஏவாக இருந்தவர், அரசியலில் ஓரளவு வெற்றி கண்டவர்களில் ஒருவர் தான், ஆனால் அதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. மற்றொரு தமிழ் நட்சத்திரமான சரத்குமார் தனிக்கட்சி தொடங்கினார். ஆனால், 2016ல் வெற்றி பெற்ற பிறகு, தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐந்து மாதங்களுக்கு முன்பு, அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார் .

Also Read: “இந்து மத சான்றிதழ் கேட்டனர்” – மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மீது நடிகை நமீதா பரபர புகார்

இப்படி பட்ட சூழலில் தமிழகத்தில் தர்ற்போது இருக்கும் திமுக அரசுக்கு விஜயின் புதிய கட்சி சவாலாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமைக்கு விஜய் உண்மையில் சவால் விடுவாரா? மற்றவர்களால் செய்ய முடியாததை அவரால் செய்து, தனது சினிமா கவர்ச்சியை அரசியல் செல்வாக்கிற்கு மாற்ற முடியுமா? அல்லது யாரும் பார்க்காத திருப்பத்தில் முடியும் இன்னொரு ஸ்கிரிப்டாக இது இருக்குமா? என்ற கோணத்தில் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

Also Read: கனவில் இதெல்லாம் கண்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்!

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது நடிகர் எம்.ஜி.ஆர் தமிழ்நாடு முதலமைச்சராக தேர்வு செய்வதற்கு முன் அவர் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர். தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலுக்கு நிழையும் முன் சினிமா துறையில் இருந்தவர். அந்த வரிசையில் தற்போது விஜய் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழ்நாடு மக்களாகிய நாம் எந்த நட்சத்திரம் தமிழ்நாட்டை ஆளப்போகிறார் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

Latest News