5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: மகனை கொன்ற தந்தை.. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. தமிழ்நாட்டை அதிர வைத்த சம்பவங்கள்!

கடந்த செப்டம்பர் 30ம் தேதி இரவு சுப்பிரமணியன்  தனது தந்தை ராமசாமிடன் வழக்கம்போல குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் மது இருந்த ரூபாய் 200 வாங்கிச் சென்றுள்ளார். தொடர்ந்து போதை தலைக்கேறிய நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் முன் அவர் விழுந்து கிடந்துள்ளார்.  இதனையடுத்து சுப்பிரமணியன் தாய் கிருஷ்ணம்மாள் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து படுக்க வைத்துள்ளார். 

Crime: மகனை கொன்ற தந்தை.. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. தமிழ்நாட்டை அதிர வைத்த சம்பவங்கள்!
ராமசாமி
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 02 Oct 2024 09:00 AM

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் மது அருந்திவிட்டு தொல்லை கொடுத்து வந்த மகனை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதி பொம்மை நாயக்கர் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் உள்ளார். 34 வயதாகியும் திருமணம் ஆகாத இவர் நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அவரின் தொந்தரவு தாங்காததால் மது அருந்த  வீட்டில் உள்ளவர்கள் பணம் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் சுப்பிரமணியனுக்கு மது அருந்துவிட்டு பணம் கொடுத்த குடும்பத்தினரிடமே தினமும் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக இருந்துள்ளது.  இதனால் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதனுடைய கடந்த செப்டம்பர் 30ம் தேதி இரவு சுப்பிரமணியன்  தனது தந்தை ராமசாமிடன் வழக்கம்போல குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் மது இருந்த ரூபாய் 200 வாங்கிச் சென்றுள்ளார். தொடர்ந்து போதை தலைக்கேறிய நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் முன் அவர் விழுந்து கிடந்துள்ளார்.  இதனையடுத்து சுப்பிரமணியன் தாய் கிருஷ்ணம்மாள் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து படுக்க வைத்துள்ளார்.

Also Read: Palani: 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்.. பழனி செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி!

இப்படியான நிலையில் நேற்று காலை வழக்கம்போல கிருஷ்ணம்மாள் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது மகன் சுப்பிரமணியன் செயலால் ஆத்திரத்தில் இருந்த  அவரது தந்தை ராமசாமி உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. நடைப்பயிற்சி முடித்துவிட்டு வந்த கிருஷ்ணம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு திருத்தங்கல் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுப்பிரமணியன் உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தால் மகனை கொன்றதாக  தந்தை ராமசாமி தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தனர். அதில், “அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆண்டுகளாக வரலாற்று துறை ஆசிரியராக கீழகரும்பிரான்கோட்டை கிராமத்தின் வாண்டையார் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் சக்திவேல் பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ச்சியாக பல மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதில் சில மாணவர்களை தன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதோடு பள்ளியில் தன்னை நல்லவராக காட்டிக் கொள்கிறார். சக்திவேலால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் மதிப்பெண்ணில் கை வைப்பேன் என மிரட்டி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.

சக்திவேலால் பல மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற முயற்சி செய்துள்ளனர் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த புகாரை கண்டு அதிர்ச்சி அடைந்த புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மாணவர்கள்  மூன்று பேரை அழைத்துக் கொண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சக்திவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் புதுக்கோட்டை மகளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: Chennai: சென்னையில் பட்டினியால் வடமாநில தொழிலாளி மரணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி

இதேபோல கோவை அன்னூர் கோவிலம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் சௌந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்க காவல் நிலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார் சௌந்தர்யா மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தனர். அதன் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Latest News