5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: யூட்யூப் பார்த்து செயின் பறிப்பு.. சென்னையில் 3 பேர் கைது!

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தன்னிடம் இருந்து 5 சவரன் செயினை பறித்துச் சென்றதாக கொளத்தூர் குற்றப்பிரிவு காவலர்களிடம் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் பற்றி விசாரித்தனர்.

Crime: யூட்யூப் பார்த்து செயின் பறிப்பு.. சென்னையில் 3 பேர் கைது!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 29 Nov 2024 10:04 AM

சென்னையில் யூடியூப் பார்த்து செயின் பதிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நல்ல விஷயங்கள் நடைபெறும் நேரத்தில், சில குற்ற சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தன்னிடம் இருந்து 5 சவரன் செயினை பறித்துச் சென்றதாக கொளத்தூர் குற்றப்பிரிவு காவலர்களிடம் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், தினேஷ் குமார் மற்றும் 12ஆம் வகுப்பு சிறுவன் என 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு செயின் பறிப்பு தொடர்பான வீடியோக்களை யூடியூபில் பார்த்து திருட கற்றுக் கொண்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒரு மாதமாக 3 பேரும் சேர்ந்து 5 இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 10 சவரன் மதிப்புள்ள 3 தங்க செயின்கள் மற்றும் ஒரு செல்போன், ஒரு கவரிங் செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து தனுஷ் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். 17 வயது மாணவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Also Read: பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாகீர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

மனைவிக்காக நகை திருடிய கணவன்

இதற்கிடையில் சென்னை அருகே தாம்பரம் பகுதியில் வசித்து வரும் பிரியங்கா என்ற பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றால் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரியங்காவின் பக்கத்து வீட்டில் தங்கி இருக்க ராம் மிலன் என்பவர், தனது மனைவி தனக்கு தங்க சங்கிலி வேண்டும் என்று கேட்ட நிலையில் கையில் பணம் இல்லாததால் பிரியங்காவின் சங்கிலியை பறித்துச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான். மேலும் நகையை பறித்துவிட்டு உத்தரபிரதேசத்திற்கு செல்ல விரும்பர் ராம் மிலனை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டையை அதிரவைத்த சம்பவம்

இந்நிலையில் தமிழ்நாட்டை அதிர வைத்த சிவகங்கை மாவட்டம் ஆசிரியர் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த ஒரு வாரம் முன்பு பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். அதே நாளில் மற்றொரு வீட்டில் 56 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. இந்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் சஞ்சீவி ஞானசேகரன் தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

Also Read: லின்-இன் உறவில் கொடூரம்.. காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்.. சிக்கியது எப்படி?

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு அன்றைய நாளில் தேவகோட்டை பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இந்த குற்ற சம்பவம் தொடர்பாக துவாக்குடி வாழ வந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்ற பூனை நாகராஜ் மற்றும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராஜா என்ற அழகுராஜா ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 90 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் மீட்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருட்டுக்கு பயன்படுத்த பைக் மற்றும் உபகரணங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதில் அழகுராஜா கொலை வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்று 18 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டுதான் சிறையிலிருந்து வெளியே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருட்டு சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Latest News