Chennai Traffic Diversion: சென்னையில் திடீர் மாற்றம்.. இந்தெந்த ரூட்டெல்லாம் மாறுது.. வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதவரம் பால் பண்ணை - சிப்காட் பூங்கா, பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் பால் பண்டை - சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மெட்ரோ பணிகளால் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான்.
போக்குவரத்து மாற்றம்: தலைநகர் சென்னையில் பொதுவாகனே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடியும். சாதாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரோ பணிகள், மேம்பாலம் கட்டுமானம் பணிகள், சாலை விரிவாக்கம் என பல்வேறு பணிகள் சென்னையில் பல சாலைகளில் நடந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதவரம் பால் பண்ணை – சிப்காட் பூங்கா, பூந்தமல்லி – கலங்கரை விளக்கம், மாதவரம் பால் பண்டை – சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மெட்ரோ பணிகளால் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் தான் மவுண்ட் பூந்தமல்லை சாலை வரை கத்திப்பாரா வரை போக்குவரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
எந்தெந்த பகுதிகள்?
இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, மவுண்ட் பூந்தமல்லி ரோடு X புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை CMRL பணியின் காரணமாக, பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் பரிந்துரைக்கப்பட்டு, 25.08.2024 to 27.08.2024 வரை இரவு நேரங்களில் (23.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை) சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்களில் எந்த மாற்றமும் இல்லை, அவை வழக்கம் போல் இயக்கப்படும். போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பில் உள்ள மவுன்ட் பூந்தமல்லி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அவர்கள் புதிய சாலையை நோக்கி இடதுபுறம் திரும்புவார்கள் (புஹாரி ஹோட்டலுக்கு எதிரே உள்ள போர் கல்லறை X BEL இராணுவ சாலை சந்திப்பில்) டிஃபென்ஸ் காலனி 1வது அவென்யூ (வலதுபுறம்) → கண்டோன்மென்ட் சாலை (இடதுபுறம் திருப்பம்) சுந்தர் நகர் 7வது குறுக்கு → தனகோட்டி ராஜா தெரு SIDCO இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு கட்ட சாலை ஒலிம்பியா × 100 அடி சாலை சந்திப்பு.
Also Read: இன்று முதல் மீண்டும் 21 மின்சார ரயில்கள் ரத்து.. எத்தனை நாட்களுக்கு? எந்த வழித்தடத்தில் ?
இங்கிருந்து, வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலதுபுறமாகவும், வடபழனியை அடைய இடதுபுறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கிச் செல்லலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றாவாறு மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.