5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: சென்னை ரயில் நிலையத்தில் அதிர்ச்சி.. இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. மதுபோதையில் காவலர் செய்த சம்பவம்!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் மதுபோதையில் காவலர் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்  சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது அவர் சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் என்றும் தெரியவந்துள்ளது.

Crime: சென்னை ரயில் நிலையத்தில் அதிர்ச்சி..  இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. மதுபோதையில் காவலர் செய்த சம்பவம்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Published: 03 Sep 2024 07:51 AM

இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் மதுபோதையில் காவலர் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 25ஆம் தேதி நடைமேடையில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு சாதாரண உடையில் சென்ற ஆண் ஒருவர் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்  சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் ரயில் நிலையத்தில் தனது நண்பருடன் விடுதிக்கு செல்வதற்கு அமர்ந்துக் கொண்டிருந்தேன். ரயிலுக்கு காத்துக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் தெரிவித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது அவர் சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் என்றும் தெரியவந்துள்ளது.

Also Read: தமிழகத்தில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை… ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ!

இதனை அடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், நான்கு தனிப்படைகள் அமைத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். பாலியல் புகாரை தொடர்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. மேலும், காவலர் கமலக் கண்ணன் நீதிமன்றத்துக்கு சென்று முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

காவலர் பணியிடை நீக்கம்:

இதனை அடுத்து, போலீசார் தாம்பரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று வழக்கு சம்பந்தமான பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணையை அளித்து உள்ளனர். துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், காவல்துறை உயர் அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்த பெண் மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுபாடி அருகே ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் இந்த சம்பவம் நடத்திருக்கிறது. பெண் மென் பொறியாளரான இவர், கடந்த 25ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு விரைவு ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.

Also Read: ஒற்றை கை இருந்தாலும் தன்நம்பிக்கையுடன் சாதித்து காட்டிய மாணவன்.. கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்..

இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். இந்த விரைவு ரயில் காட்பாடியை அடைந்தபோது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கழிவறைக்கு சென்ற பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து, கிஷோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest News