Chennai Powercut: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. உங்கள் ஏரியாவில் எப்படி?
மின் தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
மின்தடை: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. எனவே உங்களது பணிகளை அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.
மின் தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
அந்த வகையில் செபடம்பர் 16 ஆம் தேதியான இன்று, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சென்னையில் முகப்பேர், செம்பியம், ராஜ கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
Also Read: இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களே உஷார்! இப்படியான உடல்நலப்பிரச்னை வரலாம்!
சென்னையில் எங்கே மின் தடை?
முகப்பேர் பகுதிகள்
முகப்பேரில், பன்னீர் நகர், பெருமாள் கோயில் ஜே.ஜே.நகர் மேற்கு, திருவள்ளுவர் சாலை, வேலம்மாள் பள்ளி சாலை, TS கிருஷ்ணா நகர், ஆருத்ரா தெரு, ஜீவன் பீமா நகர், ரவுண்ட் பில்டிங், TVS காலனி, TVS அவென்யூ, இளங்கோ நகர், சத்தியவதி நகர், ரத்தினம் தெரு, மூர்த்தி நகர், சீனிவாச நகர், பாக்கியத்தம்மாள் நகர், பெரியார் மெயின் ரோடு, காமராஜர் தெரு, பாரதியார் தெரு, நேரு தெரு, முகப்பேர் சாலை, சத்தியா நகர், கோல்டன் காலனி, வெஸ்ட் எண்ட் காலனி, கலெக்டர் நகர், கலைவாணர் காலனி, பாடி புதூர் நகர், ஓஎன்ஜிசி, எம்ஜி சாலை, திருவாலீஸ்வரர் காலனி, சக்தி நகர், கலைவாணர் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க: நான் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்தில் மது விலக்கை நீக்குவேன்.. பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!
செம்பியம் பகுதிகள்
செம்பியத்தில், குமரன் நகர், ராய் நகர், சக்திவேல் நகர், முத்தமிழ் நகர், வெங்கடேஸ்வரா காலனி, மூலக்கடை, ஜம்புலி காலனி, வெற்றி நகர், சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.
ராஜகீழ்பாக்கம் பகுதிகள்
கீழ்பாக்கத்தில், சரவணா நகர், பார்வதி நகர், வி.ஜி.பி., சீனிவாச நகர் வடக்கு, தெற்கு, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.