Chennai Power Cut: சென்னையில் இன்று மின்வெட்டு.. பராமரிப்பு பணிகளுக்காக இந்த பகுதிகளில் மின்தடை..
சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி. சென்னையில் இன்று (06.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தி நகர், கே.கே.நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது. தினசரி பராமரிப்பு பணிகளின் அடிப்படையில் இந்த மின் தடை செய்யப்படுகிறது.
சென்னையில் மின்தடை – ஏரியா வைஸ் லிஸ்ட்:
அண்ணாநகர்
சாந்தி காலனி, பழைய எல், ஒய் மற்றும் இசட் தொகுதிகள், 7வது மெயின் ரோடு, டிஎன்எச்பி குவார்ட்டர்ஸ், ஷெனாய் நகர் மேற்கு 1-8 குறுக்குத் தெரு, கதிரவன் காலனி மற்றும் கஜ லட்சுமி காலனி, மற்றும் பாரதிபுரம், அமிஞ்சிக்கரை, பிபி கார்டன், எம்எம் காலனி, என்எஸ்கே நகர் மற்றும் ஸ்கைவாக் என்எம் சாலை.
கே.கே.நகர்
கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், இன்பராஜபுரம், வரதராஜப்பேட்டை, ரணராஜபுரம், காமராஜர் நகர், பரகுவேசபுரம், அஜீஸ்நகர் 1வது மற்றும் 2வது தெருக்கள், சூளைமேடு, அதிரேயபுரம், கில் நகர் , வடபழனி, ஆண்டவர் நகர், அசோக் நகர், சுப்புராயன் தெரு, காமராஜர் காலனி 1 மற்றும் 8வது தெருக்கள், அழகிரி நகர், சாலிகிராமம் 100 அடி சாலையை சுற்றியுள்ள பகுதிகள்.
இதையும் படிங்க: 8 மாவட்டங்களில் பிச்சு உதற போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்!
சோழிங்கநல்லூர்
சீதளபாக்கம், ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, டிவி நகர், மகேஸ்வரி நகர், டிஎன்எச்பி காலனி மேடவாக்கம் பாம் ரோடு, ராயல் கார்டன், ஐஸ்வர்யா நகர், ஆர் ஆர்சி நகர், பிள்ளையார் கோவில் தெரு, குளக்கரை தெரு, நெசவலன் நகர், அண்ணாசாலை, கோவாரிவாக்கம், விஜயநகரம் , வேளச்சேரி மெயின் ரோடு, விதுனராஜபுரம், பாலாஜி நகர், கோபாலபுரம், ஆதிநாத் அவென்யூ, மாடம்பாக்கம், கோவிலஞ்சேரி, நூட்டஞ்சேரி.
பட்டாபிராம்
மிட்டனமல்லி காந்தி ரோடு, பல்லவேடு ரோடு, எம்இஎஸ் ரோடு, முத்தம்புடுபேட்டை, டிஃபென்ஸ் காலனி.
பொன்னேரி
கும்மிடிப்பூண்டி பிர்லா கார்பன் லிமிடெட், சிப்காட் பைபாஸ், ஓபிஜி பவர் ஜெனரேஷன், புதிய கும்முடிப்பூண்டி, கங்கன் தொட்டி, பாப்பான் குப்பம், சிந்தலக்குளம், கொண்டமநல்லூர், ஆரம்பாக்கம், நாயுடு குப்பம், எழும்மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர்
பாக்கியம் அம்மாள் நகர், பெரியார் மெயின் ரோடு, ஒலிம்பிக் காலனி, அக்ஷயா காலனி, காமராஜர் தெரு, டிவிஎஸ் காலனி மற்றும் அவென்யூ, எல்ஐசி காலனி, சென்னை பப்ளிக் பள்ளி சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
திருவான்மியூர்
காமராஜ் நகர், மேற்கு அவென்யூ, எல்பி சாலை, ஆவின் நகர் மெயின் ரோடு, பாரதி நகர்.
தி.நகர்
மேற்கு மாம்பலம் I – நரசிமான் தெரு, ஏரிக்கரை சாலை, வெங்கடாச்சலம் தெரு, சத்தியபுரி தெரு, ஆஞ்சநேயர் தெரு, ராஜா தெரு, மாணிக்கம் தெரு, தம்பயா சாலை, ராஜகோபாலம் தெரு, வேலு தெரு, வீராசுவாமி தெரு, கிரி தெரு, பிருந்தாவன் தெரு, லட்சுமி நாராயண் தெரு, உமாபதி தெரு, கணபதி தெரு, சக்ரபாணி தெரு, ஷியாமளவதன தெரு, மாரியம்மன்கோவில் தெரு, ஜேபி தெரு, அப்பாசாமி தெரு, தனசேகரன் தெரு, ஆர்ய கவுடா சாலை, பிவி தெரு, நக்கீரன் தெரு, மேற்கு மாம்பலம் II – ஈஸ்வரன் கோவில் தெரு, அப்பா ரெட்டி தெரு, காசிவிஷ்வந்த தெரு, பட்டேல் தெரு, லேக்வியூ சாலை, காம்கோடி காலனி, ராமகிருஷ்ணாபுரம் 1 முதல் 3வது தெருக்கள், ஆர்யகவுடா சாலை, எல்லையம்மன் கோவில் தெரு, சீனிவாச ஐயங்கார் தெரு, நாயக்கமர் தெரு, முத்தாலம்மன் தெரு. பாபு ராஜேந்திரபிரசாத் 1 முதல் 2வது தெருக்கள், கிருஷ்ணமூர்த்தி 48 தெரு, படவெட்டு அம்மன், கேஆர் கோவில், தேவநாத காலனி, வண்டிக்காரன் தெரு மற்றும் வடிவேல்புரம்.