Chennai Powercut : மக்களே நோட் பண்ணுங்க.. சென்னையில் இன்று இந்த பகுதிகளில் மின்தடை.. லிஸ்ட் இதோ..
சுழற்சி முறையில் நடக்கும் இடங்கள் முடிவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று (30.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அண்ணாநகர் மேற்கு, பஞ்செட்டி மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : வீட்டில் தங்க நகைகளை எளிதாக சுத்தம் செய்வது எப்படி? இங்கே சில எளிய குறிப்புகள்!
அண்ணாநகர் மேற்கு:
அண்ணாநகர் மேற்கு பகுதியில் ஜே பிளாக், வைகை காலனி, 13வது மெயின் ரோடு, வள்ளலார் குடியிருப்பு, தங்கம் காலனி, 17வது மெயின் ரோடு, திருவள்ளுவர் குடியிருப்பு, திருமூலர் காலனி, 18வது மெயின் ரோடு, மலர் காலனி, கம்பர் காலனி, 19வது மெயின் ரோடு, தென்றல் சாலை, எச்15 காலனி, மேலின் 11வது பிரதான சாலை, AP பிளாட், C செக்டர், W பிளாக், இமயம் காலனி, கைலாஷ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
பஞ்செட்டி:
பஞ்செட்டி பகுதியில் கவரப்பேட்டை, கீழ்முதல்பேடு, மேல்முதலம்பேடு, தண்டலச்சேரி, சோம்பட்டு, கிளிக்கொடி, பண்பாக்கம், ஆரணி, வடகுநல்லூர், பாலவாக்கம், துரைநல்லூர், போண்டவாக்கம், சின்னம்பேடு, கரணி, புதுவொயல், பெருவொயல், இராசபாவம், கொழும்பேடு, கொழும்பேடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ராட்சத முதலைகள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
ஆவடி:
ஆவடி பகுதியில் சி.டி.எச்.ரோடு, காந்தி நகர், கவரப்பாளையம், சிந்து நகர், டி.ஆர். நகர், பெரியார் தெரு, முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயில் காவல் நிலையம், BSNL – C.T.H. சாலை, H.V.F. சாலை, ஆவடி பேருந்து நிலையம், சோதனைச் சாவடி, N.M. சாலை, நந்தவன மேட்டூர், கஸ்தூரிபாய் நகர், கன்னிகாபுரம், நேரு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.