Chennai Powercut: ஆயிரம் விளக்கு முதல் திருமங்கலம் வரை.. சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின் தடை..
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு, மேடவாக்கம், திருவொற்றியூர், அம்பத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செபடம்பர் 18ஆம் தேதியான இன்று, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஆயிரம் விளக்கு, மேடவாக்கம், திருவொற்றியூர், அம்பத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
Also Read: அறநிலையத்துறையில் வேலை.. 8ஆம் தேதி தேர்ச்சி போதும்.. உடனே செக் பண்ணுங்க!
சென்னையில் எங்கே மின் தடை?
ஆயிரம் விளக்கு:
அஜீஸ் முல்க் 1வது தெரு முதல் 5வது தெரு வரை, GAA கான் 1வது தெரு முதல் GAA கான் 10வது தெரு வரை, கதவு எண்.659 முதல் 662 வரை, அண்ணாசாலை, ஆயிரம் விளக்குகள் 9 முதல் 13 வரை, ஷாபி முகமது சாலை, ஆயிரம் விளக்குகள் பேகம் சாஹிப் 1வது தெரு முதல் 3வது தெரு வரை, காளியம்மன் கோயில் 1வது தெரு & 2வது தெரு, ராமசாமி தெரு (ஒரு பகுதி), மாதிரி பள்ளி சாலை, அண்ணாசாலை கதவு எண்.709 முதல் 737 வரை, கிரீம்ஸ் சாலை (முருகேசன் வளாகம்), க்ரீம்ஸ் சாலை கதவு எண்.16 முதல் 24 & 97 முதல் 126 வரை, அஜீஸ் முல்க் 3வது தெரு கதவு எண்.1 முதல் 8 & 89 முதல் 96 வரை , அழகிரி நகர் ஆகிய பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை:
அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு கட்டம், முகப்பேர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை (1வது மற்றும் 2வது பிரதான சாலையின் ஒரு பகுதி), தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, SSOA வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.
மாங்காடு:
மாங்காடு நகரம், ரகுநாதபுரம், கொள்ளுமணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர் பத்திரிமேடு காலனி, சீனிவாச நகர், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே.கே.நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.
மேடவாக்கம்:
தர்மலிங்கம் நகர், சாய் கணேஷ் நகர், பாரி வள்ளல் நகர் (பகுதி), வாலை நிறுவனம் (பகுதி), ஜல்லடியன்பேட்டை (பகுதி), ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேய நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.
திருவொற்றியூர்:
TH சாலை எஸ்பி கோயில் தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர், வடக்கு மற்றும் தெற்கு மாடா தெரு, திருநகர், கே.வி.குப்பம், EH சாலை, அஞ்சுகம் நகர், சக்திபுரம், ராஜீவ் காந்தி நகர், ஜீவன்லால் நகர், மாணிக்கம் நகர், CMRL ஸ்ரீரங்கம், புதிய நகரம், காந்தி நகர், சின்ன எரனூர், விம்கோ நகர், திருவொற்றியூர் பகுதி, சடையங்குப்பம், சன்னதி தெரு, அம்பேத்கர் நகர், ராஜா சண்முகம் நகர், பாலகிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.
Also Read: ஆயதங்களாக மாறிய பேஜர்கள்… திடீரென வெடித்ததால் பரபரப்பு.. லெபனானில் இஸ்ரேல் ஆட்டம்?
திருமங்கலம்:
முழு மெட்ரோசோன், சத்திய சாய் நகர், பாடிக்குப்பம் மெயின் ரோடு, TNHB குவார்ட்டர்ஸ், பழைய பென், கோல்டன் ஜூபிலி குடியிருப்புகள், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், விஜிஎன் அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், பாடிகுப்பம் & ரயில் நகர், அனைத்து மாட வீதிகள், சிவன் கோயில் தெரு, சீனிவாசன் நகர், 100 அடி சாலை, புதிய காலனி மேட்டுக்குளம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.