Chennai Powercut: சென்னை மக்களே.. இந்த ஏரியாவில் எல்லாம் இன்று மின்தடை!
தமிழ்நாடு அரசு மின்வாரியம் சார்பில் சீரான மின்விநியோகம் இருக்க மாதம் ஒருமுறை துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பது வழக்கம். பராமரிப்பு பணிகள் நடக்கும் இடங்கள் சுழற்சி முறையில் முடிவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்படும்.
மின்தடை: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு மின்வாரியம் சார்பில் சீரான மின்விநியோகம் இருக்க மாதம் ஒருமுறை துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பது வழக்கம். பராமரிப்பு பணிகள் நடக்கும் இடங்கள் சுழற்சி முறையில் முடிவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்படும். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருக்கும் தகவல்களை காணலாம்.
இதையும் படிங்க: Chennai: விடிய விடிய அவதி.. இருளில் மூழ்கிய சென்னை.. என்ன நடந்தது?
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
நாப்பாளையம்
மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம். எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவயல், நாபாளையம், இடையான் சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டகரை, எக்கல் காலனி. பொன்னியம்மன் நகர், செம்மணலி. எம்.ஆர்.எப். நகர். சுப்ரமணி நகர்.
எஸ்.ஆர்.எம்.சி
ஐயப்பன்தாங்கல். ஆர்அருநகர் காட்டுப்பாக்கம். புஷ்பா நகர்வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வலசரவாக்கம் (பகுதி பகுதி). போரூர் கார்டன் முதல் மற்றும் இரண்டாம் கட்டம். ராமசாமி நகர், அர்பன் ட்ரீ, ஆற்காடு சாலை (ஒரு பகுதி). எம்.எம். எஸ்டேட். ஜி.கே. எஸ்டேட். சின்ன போரூர், வானகரம் (ஒரு பகுதி). பரணிபுத்தூர். காரம்பாக்கம். சமயபுரம். பொன்னி நகர், செட்டியார் அகரம். பூந்தமல்லி சாலை (ஒரு பகுதி). பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர். தெள்ளியாரகரம்
(2/2) pic.twitter.com/XtHO5VnmKi
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) September 12, 2024
திருமுல்லைவாயல்
செந்தில் நகர். காளிகாம்பாள் நகர், அர்ஜுனா நகர், ஸ்ரீநகர் காலனி. சீனிவாச நகர் (சோளம்பேடு சாலை).
கும்மிடிபூண்டி
உயரழுத்த நுகர்வோர் கனிஷ்க். அருண் ஸ்மெல்டர்ஸ். செஞ்சுரி ப்ளைவுட் மற்றும் மிட்சுபா. எளாவூர் பஜார், சுண்ணாம்புக் குளம். பெத்திக்குப்பம். கயிலார் மேடு. ஆரம்பாக்கம் பஜார், நொச்சிக்குப்பம். ஏகுமதுரை, எடூர் கும்பிளி. தொக்கமூர். தண்டலம் மற்றும் பகுதிகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த நுகர்வோர்.
இதையும் படிங்க: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ரெடி.. அதிர்ச்சி கொடுத்த மம்தா.. மேற்கு வங்க அரசியலில் ட்விஸ்ட்!
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சென்னையில் 13.09.2024 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி கீழ்காணும் இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தியாகராய நகர்
செயற்பொறியாளர்/ இயக்கம் & பாராமரிப்பு/ தியாகராய நகர் அலுவலகம், 110 கிலோ வாட்.
வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலையம்,
எண்.97, எம்ஜிஆர் சாலை, (கோடம்பாக்கம் நெடுஞ்சாலை)
மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில்,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 600034.
- வியாசர்பாடி
செயற்பொறியாளர்/ இயக்கம் & பாராமரிப்பு/ தியாகராய நகர் அலுவலகம், 110/33 கிலோ வாட்.
வியாசர்பாடி துணை மின் நிலையம்,
ராமலிங்கர் கோவில் எதிரில்,
வியாசர்பாடி,
சென்னை – 600039
பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தி்ல் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருளில் மூழ்கிய சென்னை
சென்னை மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் சென்னை மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கியது. அதிகாரிகள் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்தனர். சென்னையில் முக்கிய இடங்களான திருவல்லிக்கேணி, , தேனாம்பேட்டை, மந்தவெளி, ராயபுரம், சூளைமேடு,சேப்பாக்கம், கோட்டூர்புரம், நந்தனம், அடையாறு மாதவரம், கோடம்பாக்கம்,நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களும் மின்தடையில் சிக்கியதால் அனைத்து இடங்களும் கும்மிருட்டாக காட்சியளித்தது.தமிழ்நாடு அரசின் மின்சார துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை முழுவதும் அடுத்த 15 முதல் 30 நிமிடத்தில் மின் விநியோகம் படிப்படியாக சீராகும் என சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தபடி மின் விநியோகம் சீரானது குறிப்பிடத்தக்கது.