Chennai Powercut : சென்னையில் நாளை மறுநாள் இந்த பகுதிகளுக்கு மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?
Power Cut | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் நாளை மறுநாள் (27.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அடையாறு, அஸ்தினாபுரம், மடிப்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.
மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் நாளை மறுநாள் (27.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அம்பத்தூர், செம்பரக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Hema Committee : கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ மீது நடிகை பரபரப்பு பாலியல் புகார்.. பதவி விலக கோரி காங்கிரஸ் போராட்டம்!
27.08.2024 அன்று சென்னையில் எங்கெல்லாம் மின்தடை
அம்பத்தூர் :
அம்பத்தூரில் எஸ் அண்ட் பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசென்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி ரோடு, பொன்னியம்மன் நகர், வானகரம் சாலை, ராஜன்குப்பம், விஜிஎன் மகாலட்சுமி நகர், எஸ் & பி ரெசிடென்சி, மெட்ரோ சிட்டி ஃபேஸ் I & II, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பிகேஎம் தெரு, எருளார் காலனி, எட்டீஸ்வரன் கோயில் தெரு, செட்டி பிரதான தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதிய 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும்.
செம்பரக்கம் :
செம்பரக்கம் பகுதிகளில் முழு நசரத்பேட்டை பகுதி, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூரு டிரங்க் ரோடு, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரம்மேல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதிய 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும்.
ரெட்ஹில்ஸ் :
ரெட்ஹில்ஸ் பகுதிகளில் பாடியநல்லூர், ஜோதி நகர், கல்பகா நகர், மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதிய 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும்.
இதையும் படிஙக் : அடுத்தடுத்து மோதிக்கொண்ட 13 வாகனங்கள்.. 5 பேர் பலியான நிலையில் 10 பேர் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்!
எனவே மேற்குறிப்பிட்ட இந்த பகுதிகளில் வரும் 27.08.2024 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.