Chennai Powercut: சென்னையில் அம்பத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை.. வேறு எங்கே? லிஸ்ட் இதோ..
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின்தடை: சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் 5 மணி நேரத்திற்கு மின்தடை செய்யப்படுகிறது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும். தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
Also Read: இன்று தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மின்தடை.. எங்கே? எந்த பகுதிகளில்? முழு விவரம்..
பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று (27.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அம்பத்தூர், செம்பரக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்படுகிறது.
எந்தெந்த இடங்கள்?
ரெட்ஹில்ஸ் :
ரெட்ஹில்ஸ் பகுதிகளில் பாடியநல்லூர், ஜோதி நகர், கல்பகா நகர், மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதிய 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும்.
Also Read: 35 அடி சிவாஜி சிலை.. கீழே சரிந்து விழுந்து சுக்குநூறாக உடைந்த சம்பவம்..
அம்பத்தூர் :
அம்பத்தூரில் எஸ் அண்ட் பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசென்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி ரோடு, பொன்னியம்மன் நகர், வானகரம் சாலை, ராஜன்குப்பம், விஜிஎன் மகாலட்சுமி நகர், எஸ் & பி ரெசிடென்சி, மெட்ரோ சிட்டி ஃபேஸ் I & II, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பிகேஎம் தெரு, எருளார் காலனி, எட்டீஸ்வரன் கோயில் தெரு, செட்டி பிரதான தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதிய 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும்.
செம்பரக்கம் :
செம்பரக்கம் பகுதிகளில் முழு நசரத்பேட்டை பகுதி, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூரு டிரங்க் ரோடு, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரம்மேல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதிய 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும்.