5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Train Cancelled: கவனிங்க மக்களே.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட்டில் தெரியுமா?

ரயில்கள் ரத்து : சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக  அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதும், பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, திருவள்ளூர் - சென்னை கடற்கரை வரை இயக்கக் கூடிய மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில் நேரம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Train Cancelled: கவனிங்க மக்களே.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட்டில் தெரியுமா?
சென்னை ரயில்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Sep 2024 10:40 AM

மின்சார ரயில்கள் ரத்து: சென்னையில் இன்றும், நாளையும் முக்கிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் ரயில் போக்குவரத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயியில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் மட்டும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். மின்சார ரயில் சேவை ஒருநாள் இல்லாவிட்டாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் மின்சார ரயில்களை முறையாக ரயில்வே நிர்வாகம் பராமரித்து வருகிறது.  இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக  அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதும், பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது. அதன்படி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, திருவள்ளூர் – சென்னை கடற்கரை வரை இயக்கக் கூடிய மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read: பொங்கலுக்கு ஊருக்கு போற பிளானா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்போகுது.. நோட் பண்ணுங்க!

எந்தெந்த வழித்தடங்கள்?

ரத்து செய்யப்பட்ட ரயில் நேரம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், திருவள்ளூர் – சென்னை கடற்கரை வரை இரவு 9.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் வரை இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் வரை இரவு 8.55 மணிக்கு இயக்கப்படும் இயக்கப்படும் மின்சார ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை – தாம்பரம் வரை இரவு 10.20 மணிக்கு இயக்கப்படும் இயக்கப்படும் மின்சார ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – திருவள்ளூர் வரை இரவு 7.50 மணிக்கு இயக்கப்படும் இயக்கப்படும் மின்சார ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது. மாலை 4.00 மணிக்கு சென்னை கடற்கரை – அரக்கோணம் வரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அபோல, கும்மிடிபூண்டு – சென்னை கடற்கரை வரை இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் காலை 3.55 மணிக்கு செல்லும் ரயில்கள் இன்றும், நாளையும் எழும்பூரில் இருந்து புறப்படும். இரவு 9.10 மணிக்கு செங்கல்பட்டு – கடற்கரை வரை செல்லும் ரயில்கள் இன்றும், நாளையும் எழும்பூர் வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – சென்னை கடறரை வரை இரவு 10.10, 11 மணிக்கு செல்லும் ரயிக்லள் எழும்பூர் வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி – கடற்ரை வரை இரவு 10.10, 10.40, 11.15 மணி ரயில்கள் இன்றும், நாளையும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ரயில் நேரங்களை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

Also Read: சென்னையின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ!

முன்னதாக, நேற்று வெளியான அறிவிப்பில் கூடுவாஞ்சேரி – தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரவு 8.55, 10.10, 10.25, 11.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனை அடுத்து, மதியம் 12.10 மணிக்கு மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முதல் சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Latest News