Thiruvarur: மின்சாரம் தாக்கி உயிரிழந்த அண்ணன்.. ஃப்ரீஸர் பாக்ஸ் மின்சாரம் தாக்கி தங்கையும் பலி!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அணியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. 42 வயதான இவர் மின்சாரத் துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்கும் முயற்சியில் குருமூர்த்தி ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அணியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. 42 வயதான இவர் மின்சாரத் துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்கும் முயற்சியில் குருமூர்த்தி ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வலங்கைமான் காவல் துறையினர் மின் ஊழியர்களின் உதவியுடன் குருமூர்த்தியின் உடலை டிரான்ஸ்பார்மரில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குருமூர்த்தியின் மறைவு அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: Harassment : கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்ற கொடூரம்!
இதற்கிடையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட குருமூர்த்தியின் உடல் அணியமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அவரின் உடலை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதனர். மேலும் குருமூர்த்தி உடல் குளிர்சாதனம் பெட்டியில் வைக்கப்பட்டு உறவினர்கள், அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் இந்த குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் கசிவு ஏற்பட்டுள்ளதை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர். இப்படியான நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குருமூர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஏழு பேர் பெட்டியை தொட்ட நிலையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டினார்.
உடனடியாக அதிர்ச்சியடைந்த குருமூர்த்தி குடும்பத்தினர் சக உறவினர்கள் உதவியுடன் மின்சாரம் தாக்கியவர்களை கும்பகோணம் அரசு பொது மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இவர்களில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுந்தரி என்பவர் உயிரிழந்தார்.
இவர் மறைந்த மின்வாரிய ஊழியர் குரு மூர்த்தியின் சகோதரி ஆவார். அதேசமயம் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பாக்கியலட்சுமி, அபர்ணா, உமாராணி, அகத்தியா, ஜெயசுதா, துர்கா தேவி ஆகிய ஆறு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Viral Video : ரயிலின் அப்பர் பர்த்தில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதறிப்போன பயணிகள்.. அடுத்து நடந்தது என்ன?
இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் கசிவு ஏற்பட்டது தொடர்பாக அதனை விநியோகம் செய்த நிறுவனத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துக்க வீட்டுக்கு வந்த இடத்தில் மின்சாரம் தாக்கி மற்றொரு உயிரும் பறிபோன சம்பவம் வலங்கைமான் பகுதியில் மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கியுள்ளது.
தொடரும் மின் விபத்துகள்
இதேபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள என்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சாமி என்பவர் நல்லமநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். நூற்பாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆலைக்கு வெளியே செல்ல புதிய கழிவு நீர் ஓடை அப்பகுதியில் கட்டப்பட்டு வந்துள்ளது.
இந்த கழிவுநீர் ஓடை சுவர்களில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் பெருமாள் சாமி நேற்று முன்தினம் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நூற்பாலையில் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. மதிய வேலையில் அந்த வழியாக வந்த ஆலையின் காவலாளி பெருமாள் சாமி பேச்சு மூச்சின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நூற்பாலையின் உரிமையாளருக்கும், கீழ ராஜகுலராமன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் பெருமாள்சாமி உடலை சோதனை செய்தனர். இதில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெருமாள்சாமிக்கு இழப்பீடு வழங்காமல் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.