பொங்கலுக்கு ஊருக்கு போற பிளானா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்போகுது.. நோட் பண்ணுங்க!
Pongal Festival 2025: செப்டம்பர் 12ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 12ஆம் தேதியும், ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு: நாட்டில் மிக முக்கியமான அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கக்கூடிய பொது போக்குவரத்தாக ரயில் சேவை இருக்கிறது. ஆனால், ரயிலில் டிக்கெட் கிடைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. குறைந்தது சில வாரங்களுக்கு முன்பாவது டிக்கெட் புக் செய்தால் மட்டுமே ரயிலில் டிக்கெட் கிடைக்கிறது. குறிப்பாக, தீபாவளி, பொங்கல், புத்தாணடு என பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கிறது. இருப்பினும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பார்கள். குறிப்பாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமான ஒன்று. மற்ற பண்டிகைகளை காட்டிலும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அதிகமாக செல்வார்கள். குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதால் முன்கூட்டியே ரயில், பேருந்து என முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வார்கள்.
முன்பதிவு செய்யாவிட்டால் அன்றைய பண்டிகை வாரத்தில் பேருந்து கிடைப்பது மிகவும் சவாலான விஷயமாகவே உள்ளளது. இதனால் பலரும் ரயில், பேருந்துகளில் முன்பதிவு செய்கின்றனர். தற்போது ரயிலில் 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பதிவு செய்வதற்கான தேதியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Also Read: சென்னையின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ!
ரயில் டிக்கெட் முன்பதிவு 12ஆம் தேதி தொடங்குகிறது:
அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 12ஆம் தேதியும், ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அதாவது, 2025ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய் கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாள் ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), ஜனவரி 16ஆம் தேதி காணும் பொங்கல் (வியாழன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில் வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்ததால் மொத்தம் 7 நாட்கள் சொந்த ஊரில் இருந்து திரும்பலாம். இப்படி நீண்ட நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமையே பயணம் செய்ய விரும்புவார்கள்.
ஐஆர்சிடிசி இணையதளம்:
இதனால், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். வரும் 12ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு ஐஆர்சிடிசி (IRCTC) கணக்கு வைத்திருப்பது கட்டாயமாகும். இந்த ஐஆர்சிடிசி இணையதளம்/ஆப் மூலம் உங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் புறப்படும் இடம், இறங்கும் இடம், நேரம், சீட் போன்றவற்றை சரியான முன்பதிவு செய்து கொள்ளுங்கள். டிக்கெட் முன்பதிவு துவங்கிய உடனே புக் செய்து கொள்ளுங்கள்.
இல்லையென்றால் டிக்கெட் விற்று தீர்ந்துவிடும். ஏற்கனவே, தீபாவளி, ஆயத பூஜை பண்டிகை போன்ற நாட்களில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன. குறிப்பாக தீபாவளி டிக்கெட் முன்பதிவு பொருத்தவரை 84 சதவீதம் டிக்கெட் முன்பதிவு இணையதளம் மூலமாக நடந்ததாக அதிகாரிகள் கூறினர். முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட் விரைவாக விற்று தீர்ந்தன. மற்ற வகுப்புகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
Also Read: நெல்லையில் 3 வயது சிறுவன் கொடூர கொலை… பதைபதைக்கும் சம்பவம்!
இதில், சென்னையில் இருந்து புறப்படும் பகல் நேர ரயில்களான வைகை, பல்லவன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களில் முன்பதிவு காத்திருப்போர் பட்டியலை அடைந்தது. மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன. எனவே வரும் பொங்கள் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில், உடனேயே புக் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் வெயிட்டிங் லிஸ்டில் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.