பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்!
Teacher Death | திருநெல்வேலி மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியர் செல்லத்துரை. 57 வயது ஆகும் இவர், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற ஆசிரியர் செல்லத்துறை, நேற்று மதியம் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போதே மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வு செய்யப்பட்ட ஆசிரியரின் உடலை கண்டு மாணவிகள் கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், இந்த ஆசிரியார் யார், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை!
பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியர்
திருநெல்வேலி மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியர் செல்லத்துரை. 57 வயது ஆகும் இவர், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற ஆசிரியர் செல்லத்துரை, நேற்று மதியம் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர் மயங்கி விழுந்ததை அடுத்த பதறிப்போன மாணவிகள் அது குறித்து மற்ற ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து ஓடிச் சென்ற மற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் செல்லத்துரையை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : TN Deputy CM : தமிழகத்தின் துணை முதலமைச்சர் யார் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் – உதயநிதி ஸ்டாலின்!
ஆசிரியரின் உடலை கண்டு கதறி அழுத மாணவிகள்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆசிரியர் செல்லத்துரை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஆசிரியரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பள்ளி மாணவிகள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென மயங்கி விழுந்த ஆசிரியரின் உடற்கூறாய்வு செய்யப்பட்ட உடலை கண்டு மாணவிகள் கதறி அழும் காட்சிகள் அனைவரது மனதையும் உலுக்கும் விதமாக உள்ளது.
இதையும் படிங்க : பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.. நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சமீப காலமாக அதிகரிக்கும் மரணங்கள்
சமீக காலமாக திடீரென மயங்கி விழுந்து உயிரிழும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாறிவரும் கால சூழல், உணவு முறை மற்றும் சுற்றுசூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக மனிதர்களின் ஆரோக்கியம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் வேலை என ஓடிக்கொண்டிருக்கும் இந்த சமூதாயத்தில் மக்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது. வேலை பலு மற்றும் மன அழுத்தம் காரணமாகவும் பலர் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : அதிகாரிகள் முன்பு சீருடையை கழட்டி எறிந்த காவலர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்
பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது உயிரிழப்பது, நடனமாடும் போது உயிரிழப்பது, பேசிக்கொண்டே இருக்கும் போது உயிரிழப்பது என அன்றாட பணிகளை செய்யும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட தொழிலதிபர் ஒருவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துக்கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைராகியது குறிப்பிடத்தக்கது.