5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vijayakanth Birthday: கேப்டன் பிறந்தநாள்.. வெறும் 71 நிமிடங்கள்… விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்ட 71 தொண்டர்கள்!

HBD Vijayakanth: இன்று கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள். அவர் மறைந்த பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால் சோகத்துடன் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் விஜயகாந்த் உருவத்தை கையில் டாட்டூவாக தொண்டர்கள் 71 பேர் போட்டுக் கொண்டனர்.

Vijayakanth Birthday: கேப்டன் பிறந்தநாள்.. வெறும் 71 நிமிடங்கள்… விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்ட 71  தொண்டர்கள்!
விஜயகாந்த் பிறந்தநாள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Aug 2024 11:45 AM

விஜயகாந்த் பிறந்தநாள்: மறைந்த நடிகர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. சினிமா ரசிகர்களால் பாசக்கார கேப்டன் மற்றும் தனித்துவமான நடிகராகவும், தேமுதிக கட்சி நிறுவனர், எதிர்க்கட்சி தலைவர் என பிரபல அரசியல் தலைவராகவும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி தனது 71 வயதில் காலமானார். கர்ஜிக்கும் குரலுடன் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு மக்களை சென்ற ஆண்டு இறுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. என்னதாக அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் என்றென்றும் அவரின் நினைவுகள் இன்றுவரை நீங்காமல் உள்ளது. அவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி உன்னதமான மனிதர் என்பதாலே அவரின் பிரிவு இன்றுவரை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஒரு நடிகராகவும் சரி, அரசியல் கட்சி தலைவராகவும் சரி விஜயகாந்த் பலருக்கு உதவி செய்திருக்கிறார்.

Also Read: திமுக விழாவில் ரஜினி கல கல பேச்சு.. குலுங்கி குலுங்கி சிரித்த மொத்த அரங்கம்..

தானாக வந்து உதவும் குணம் கொண்ட விஜயகாந்த் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பதை இன்றுவரை பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இருப்பினும், அவர் செய்த உதவியினால் அனைவரின் மனதிலும் வாழ்த்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், இன்று கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள். அவர் மறைந்த பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால் சோகத்துடன் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்ட 71 பேர்:

இந்த நிலையில், விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் 71 பேர் அவரது முகத்தை கையில் டாட்டூ போட்டுக் கொண்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடந்தது. இதில் தொடர்கள் 71 பேருக்கு 71 நிமிடங்களில் 71 கலைஞர்கள் டாட்டூ போட்டுள்ளனர். இந்த நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இதை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

Latest News