5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paralympic 2024: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி.. பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்று புதிய சாதனை!

Paris Paralympics 2024: 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக சுமித், நிதிஷ் குமார் மற்றும் அவனி லெகரா ஆகியோர் தங்க பதக்கத்தை வென்றிருந்தனர். தொடர்ந்து, சச்சின் ஹிலாரி, சுஹாஸ் எல்ஒய், டி.முருகேசன், யோகேஷ் கதுனியா மற்றும் மணீஷ் நர்வால் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், மனிஷா ராம்தாஸ், நித்ய ஸ்ரீ சுமந்தே சிவன், மோனா அகர்வால், ப்ரீத்தி பால், ரூபினா பிரான்சிஸ், நிசாஷ் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தனர்.

Paralympic 2024: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி.. பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்று புதிய சாதனை!
பாராலிம்பிக் (Image: twitter)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 04 Sep 2024 15:07 PM

பாரிஸ் பாராலிம்பிக்: பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதுவரை இந்திய வீரர்கள் 3 தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 21 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் காரணமாக இந்தியா, பாரிஸ் பாராலிம்பிக் பதக்க பட்டியலில் 19வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன், பாராலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகள் 19 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாகவும், சிறந்த சாதனையாகவும் இருந்தது. இந்த சாதனையும் கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய பாரா தடகள வீரர், வீராங்கனைகள் வென்றிருந்தனர். தற்போது, பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் 21 பதக்கங்களை வென்று புதிய சாதனையை படைத்துள்ளது.

ALSO READ: Pakistan vs Bangladesh: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் இழப்பு.. பாகிஸ்தான் தோல்விக்கு யார் காரணம்?

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களை வென்று, மொத்தம் 19 பதக்கங்களை தனதாக்கியது.

பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை பட்டியல்:

2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக சுமித், நிதிஷ் குமார் மற்றும் அவனி லெகரா ஆகியோர் தங்க பதக்கத்தை வென்றிருந்தனர். தொடர்ந்து, சச்சின் ஹிலாரி, சுஹாஸ் எல்ஒய், டி.முருகேசன், யோகேஷ் கதுனியா மற்றும் மணீஷ் நர்வால் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், மனிஷா ராம்தாஸ், நித்ய ஸ்ரீ சுமந்தே சிவன், மோனா அகர்வால், ப்ரீத்தி பால், ரூபினா பிரான்சிஸ், நிசாஷ் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தனர்.

சீனா தொடர்ந்து முதலிடம்:

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவுக்கு இரண்டாவது இடத்தில் உள்ள கிரேட் பிரிட்டனுக்கும் இடையே 22 தங்க பதக்கம் வித்தியாசமாக உள்ளது. சீனா இதுவரை 52 தங்கம், 40 வெள்ளி, 22 வெண்கல பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ALSO READ: WTC Final 2025: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்.. தேதியை அறிவித்த ஐசிசி!

கிரேட் பிரிட்டன் 31 தங்கம், 18 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. 20 தங்கம், 22 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும், 14 தங்கம், 11 வெள்ளி, 23 வெண்கலத்துடன் பிரேசில் 4 வது இடத்தையும் பிடித்துள்ளது.

அந்த வகையில் சீனா, கிரேட் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவை பாரிஸ் பாரலிம்பிக் பதக்க பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ளது. 21 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 19வது இடத்தை பிடித்துள்ளது.

Latest News