Hokato Hotozhe Sema: கண்ணிவெடியில் கால் போச்சு.. பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்திய ஹகோடா செமா!
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து 4,400 வீராங்கனைகள் வருகை தந்துள்ள நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் செப்டம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது.
பாரா ஒலிம்பிக் தொடர்: மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து 4,400 வீராங்கனைகள் வருகை தந்துள்ள நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் செப்டம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது. இப்படியான நிலையில் பாரீஸ் பாரா ஒலிம்பிக்கின் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது.
Also Read: Sivakarthikeyan: ரஜினிகிட்ட நடக்கல.. அடுத்து விஜய்யா? – சிவகார்த்திகேயனை விமர்சித்த ப்ளூசட்டை மாறன்!
நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் தடகள வீராங்கனை பிரீத்தி பால் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரின் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஹகோடா செமா வெண்கல பதக்கம் வென்றார். 12 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் 14.65 மீட்டர் தூரம் இருந்து அவர் மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த போட்டியில் ஈரான் தங்கமும், பிரேசில் வெள்ளியும் வென்றது.
ஆடவர் குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் Hokato Hotozhe Sema வெண்கலப்பதக்கம் வென்றார். pic.twitter.com/9fuuX7Otw1
— AIR News Chennai (@airnews_Chennai) September 7, 2024
40 வயதில் பாரா ஒலிம்பிக்கில் அறிமுகமான நாகாலாந்தைச் சேர்ந்த இந்த வீரர் பின்னால் மிகப்பெரிய சோகமான கதை ஒன்று உள்ளது. அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சௌதிபாலில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்புக்கு எதிரான நடவடிக்கையின் பங்கேற்றபோது கன்னி வெடி தாக்குதலில் ஹகோடா செமா தனது இடது காலையில் இழந்தார்.
Also Read: Accident: முந்தி செல்ல முயன்றதால் விபரீதம்.. வேன் மீது பேருந்து மோதி 15 பேர் உயிரிழப்பு
இதனைத் தொடர்ந்து புனேவில் உள்ள செயற்கை மூட்டு மையத்தில் உள்ள மூத்த ராணுவ அதிகாரி இவரை பார்த்த பிறகு குண்டு எறிதல் போட்டியில் ஈடுபட அறிவுறுத்தினார். அதன்படி 2016 ஆம் ஆண்டு தனது 32 வது வயதில் பயிற்சியைத் தொடங்கிய அவர் கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும் நடப்பு பாரா ஒலிம்பிக்கில் போட்டியிட்ட ஒரே நாகாலாந்து வீரர் ஹகோடா செமா என்பது குறிப்பிடத்தக்கது.