Mangolia vs Singapore: 5 பந்தில் முடிந்த கிரிக்கெட் போட்டி.. மங்கோலியா மோசமான சாதனை!
2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையில் விளையாட நினைக்கும் கத்துக்குட்டி அணிகளுக்கிடையே தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே டி20 உலகக்கோப்பை போட்டியில் இடம் கிடைக்கும். தற்போது அதற்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்படியாக மலேசியாவின் பாங்கியில் நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியில் சிங்கப்பூர் மற்றும் மங்கோலியா அணிகள் நேருக்கு நேர் மோதியது.
மங்கோலியா அணி: மலேசியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் மங்கோலிய அணி 10 ரன்களுக்கு ஆல் அவுட்டான சம்பவம் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையில் விளையாட நினைக்கும் கத்துக்குட்டி அணிகளுக்கிடையே தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே டி20 உலகக்கோப்பை போட்டியில் இடம் கிடைக்கும். தற்போது அதற்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்படியாக மலேசியாவின் பாங்கியில் நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியில் சிங்கப்பூர் மற்றும் மங்கோலியா அணிகள் நேருக்கு நேர் மோதியது.
Also Read: Actress Sowmya: மகள் என சொல்லி எல்லை மீறிய தமிழ் இயக்குநர்.. பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் பந்துவீச்சை செய்ய தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய மங்கோலிய அணி வீரர்கள் தாங்கள் கனவிலும் இப்படி ஒரு மோசமான சாதனையை படைப்போம் என நினைத்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து ஆட்டத்த்தை மங்கோலியா வீரர்கள் தொடங்கினர். முதல் பாலை சிங்கப்பூர் அணியில் ஹர்ஷா பரத்வாஜ் வீச மோகன் விவேகானந்தன் டக் அவுட்டாகி நடையை கட்டினார். ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்த நிலையில் அதிலிருந்து மங்கோலியா அணியால் மீளவே முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து வந்த அந்த அணியின் வீரர்கள் அதிகபட்சம் இரண்டு ரன்களுக்கு மேலாக அடிக்கவில்லை. குறிப்பாக 5 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தனர். அவர்களில் 4 பேர் ஒரு ரன்னும், 2 பேர் 2 ரன்களும் அதிகப்பட்சமாக எடுத்தனர். எக்ஸ்ட்ரா வகையில் இரண்டு ரன்கள் கிடைக்க மங்கோலியா அணி 10 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிங்கப்பூர் அணி தரப்பில் ஹர்ஷா பரத்வாஜ் 4 ஓவர்கள் பந்து வீசி அதில் 2 மெய்டன் ஓவர்களாக்கினார். அதில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: போதைப்பொருள் கடத்தல்.. கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.. நடந்தது என்ன?
தொடர்ந்து அக்ஷய் பூரி 2 விக்கெட்டுகளையும், ராகுல் சேஷாத்திரி மற்றும் ரமேஷ் காளிமுத்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.தொடர்ந்து 11 ரன்கள் எடுத்தால் வெற்றியின் என்ற இலக்குடன் களமிறங்கிய சிங்கப்பூர் அணிக்கும் முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் மன்ப்ரீத் சிங் ரன் எதும் எடுக்காமல் நடையை கட்டினார். இதனால் மங்கோலியா கதை தான் சிங்கப்பூருக்கும் ஆகுமோ என ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் அடுத்த 4 பந்தில் வெற்றி இலக்கை எட்டி சிங்கப்பூர் அணி வெற்றி பெற்றது.