5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mahanaaryaman Scindia: TV9 நெட்வொர்க்கின் ’இந்திய புலிகள் மற்றும் புலிகள் டேலண்ட் ஹண்ட்’ – பிராண்ட் தூதராக மகாநாரியமன் சிந்தியா நியமனம்!

Indian Tigers and Tigresses Talent Hunt: இந்தியா முழுவதும் உள்ள இளம் கால்பந்து திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு இந்திய புலிகள் மற்றும் புலிகள் டேலண்ட் ஹன்ட் என்னும் பெயரில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டிவி9 நெட்வொர்க்கின் இந்திய புலிகள் மற்றும் புலிகள் டேலண்ட் ஹன்ட்டின் பிராண்ட் தூதராக கால்பந்து ஆர்வலர் மகாநாரியமன் சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 20 சிறுவர்கள் மற்றும் 20 சிறுமிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் கால்பந்து பயிற்சி அளிக்கப்படும்.

Mahanaaryaman Scindia: TV9 நெட்வொர்க்கின் ’இந்திய புலிகள் மற்றும் புலிகள் டேலண்ட் ஹண்ட்’ – பிராண்ட் தூதராக மகாநாரியமன் சிந்தியா நியமனம்!
TV9 நெட்வொர்க்கின் MD மற்றும் CEO பாருண் தாஸ் மற்றும் மகாநாரியமன் சிந்தியா (Image:TV9 NETWORK)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 10 Sep 2024 14:16 PM

மகாநாரியமன் சிந்தியா: டிவி9 நெட்வொர்க், பண்டெஸ்லிகா மற்றும் DFB-Pokal உடன் இணைந்து, இந்தியா முழுவதும் உள்ள இளம் கால்பந்து திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு இந்திய புலிகள் மற்றும் புலிகள் டேலண்ட் ஹன்ட் என்னும் பெயரில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டிவி9 நெட்வொர்க்கின் இந்திய புலிகள் மற்றும் புலிகள் டேலண்ட் ஹன்ட்டின் பிராண்ட் தூதராக கால்பந்து ஆர்வலர் மகாநாரியமன் சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 20 சிறுவர்கள் மற்றும் 20 சிறுமிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் கால்பந்து பயிற்சி அளிக்கப்படும். இந்த திறமைக்கான வேட்டை 100,000 பள்ளிகளுக்கு மேல் சென்றடைய முயற்சி மேற்கொள்ளப்படும். இதன் மூலம், இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச கால்பந்து அரங்கில் பிரகாசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

 

ALSO READ: IND vs BAN: விரைவில் இந்தியா – வங்கதேச டெஸ்ட் தொடர்.. பல சாதனைகளை கோலி, அஸ்வின் முறியடிக்க வாய்ப்பு!

இதன்பிறகு வருகின்ற நவம்பர் மாதம், இந்த இளம் விளையாட்டு சர்வதேச அரங்கில் அவர்களின் சாதனைகளுக்காக கௌரவிக்கப்படுவார்கள். கால்பந்து மற்றும் இளைஞர் மேம்பாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மகாநாரியமன் சிந்தியா, திறமையைக் கண்டறிவது மட்டுமல்லாமல், இந்திய கால்பந்தின் எதிர்காலத்திற்கு வழிவகுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இதுகுறித்து மகாநாரியமன் சிந்தியா தெரிவிக்கையில், “கால்பந்து என் இதயத்திற்கு நெருக்கான ஒன்று. நம் நாட்டில் எவ்வளவோ திறமையான வீரர், வீராங்கனைகளை திறன் வீணானதை நான் நேரடியாக பார்த்துள்ளேன். இந்திய புலிகள் மற்றும் புலிகள் டேலண்ட் ஹண்ட் இளம் வீரர்களுக்கான கதவுகளை திறக்கும் ஒரு திட்டமாகும். இதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது குழந்தைகளுக்கு ஒரு தளத்தை வழங்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் வெற்றி பெறுவதற்கான வழி மற்றும் வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கும்” என்று தெரிவித்தார்.

ALSO READ: Ind vs Ban: 24 ஆண்டுகால டெஸ்ட் வரலாறு.. இதுவரை இந்தியா- வங்கதேசம் மோதலில் யார் ஆதிக்கம்?

தொடர்ந்து TV9 நெட்வொர்க்கின் MD மற்றும் CEO பாருண் தாஸ் பேசுகையில், “ நாங்கள் ஒரு சமூக ஊக்கியாக இருக்கிறோம். மேலும் சிறந்த இந்திய கால்பந்தை ஆதரிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இந்திய புலிகள் மற்றும் புலிகள் டேலண்ட் ஹன்ட் என்பது எனக்கு மிகவும் தனிப்பட்ட திட்டமாகும். இந்த திட்டமானது இளம் கால்பந்து வீரர்களை வெளிக்கொணர்ந்து வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. மகாநாரியமன் சிந்தியா இந்த திட்டத்தில் இணைந்திருப்பது, இந்திய கால்பந்தின் எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள தாக்கத்தையும், இளைஞர்களின் திறனை மேம்படுத்தும்” என்று தெரிவித்தார்.

இந்திய புலிகள் மற்றும் புலிகள் டேலண்ட் ஹன்ட் என்றால் என்ன?

இந்திய புலிகள்-புலிகள் டேலண்ட் ஹன்ட் என்பது நாட்டில் உள்ள இளம் கால்பந்து வீரர்களை அடையாளம் காணும் திட்டமாகும். TV9 நெட்வொர்க், ஜெர்மன் பண்டெஸ்லிகா மற்றும் DFB-Pokal உடன் இணைந்து இந்தியாவில் இந்த திறமை நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்துகிறது.

இதன் மூலம், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கால்பந்து திறமைகளை கண்டறியும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 ஆயிரம் பள்ளிகளில் திறமை தேடல் நடத்தப்பட்டு, இதன் மூலம் மொத்தம் 40 கால்பந்து நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுவர்களும் 20 சிறுமிகளும் கால்பந்து பயிற்சிக்காக ஜெர்மனிக்கு அனுப்பப்படுவார்கள். இதன் மூலம், சர்வதேச அளவில் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்தியாவில் கால்பந்து சிறந்து விளங்கும் புதிய சகாப்தத்தை வளர்க்க டிவி9 நெட்வொர்க் திட்டமிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மற்றும் பங்கேற்க, பார்வையிடவும்: www.indiantigersandtigresses.com

Latest News