5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: பயிற்சியாளராக யுவராஜ் சிங்! ஒப்பந்தம் போட்ட டெல்லி..? வெளியான தகவல்!

Yuvraj Singh: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகியுள்ள நிலையில், தற்போது டெல்லி அணிக்கு புதிய பயிற்சியாளர் தேவையாக உள்ளது. இதையடுத்து, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், உலகக் கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங் டெல்லி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL 2025: பயிற்சியாளராக யுவராஜ் சிங்! ஒப்பந்தம் போட்ட டெல்லி..? வெளியான தகவல்!
யுவராஜ் சிங்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 25 Aug 2024 10:42 AM

யுவராஜ் சிங்: இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசன் முடிந்து மூன்று மாதங்களே ஆனாலும், அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பு தற்போதே நிலவி வருகிறது. வருகின்ற டிசம்பர் மாதம் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை விடுவிக்கும், தக்க வைக்கும் உள்ளிட்ட அப்டேட்கள் வெளியாகும். இதில் கேப்டன் மற்றும் பயிற்சியாளறை மாற்ற பல அணிகள் திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில், பல முக்கிய மாற்றங்கள் பற்றிய அப்டேட் தற்போது வெளியாகி வருகின்றன. டெல்லி கேப்பிடல்ஸ் அணி தற்போது யுவராஜ் சிங்கை பயிற்சியாளராக கொண்டு வர முயற்சி கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: IPL 2025: ஐபிஎல் மெகா ஏலம்தான் கடைசி.. இந்த இந்திய வீரர்கள் ஓய்வை அறிவிக்கலாம்..!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகியுள்ள நிலையில், தற்போது டெல்லி அணிக்கு புதிய பயிற்சியாளர் தேவையாக உள்ளது. இதையடுத்து, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், உலகக் கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங் டெல்லி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யுவராஜ் சிங் ஏற்கனவே தனது அகாடமியின் கீழ் பல்வேறு வீரர்களை வளர்த்து வருகிறார். ஹைதராபாத் அணிக்காக கடந்த சீசனில் கலக்கிய அபிஷேக் சர்மா, யுவராஜ் சிங்கின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் யுவராஜ் சிங் பயிற்சியாளர் பதவிக்கு வர முயற்சி செய்தார். ஆனால், அதற்கான நேரம் அமையவில்லை. தற்போது வெளியான தகவலின்படி, டெல்லி அணியின் பயிற்சியாளராக யுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கடந்த சீசனில் டெல்லியின் பயணம்:

கடந்த ஐபிஎல் 2024 சீசன் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 6வது இடத்தை பிடித்தது. டெல்லி கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி தலா 7 வெற்றி, 7 தோல்வியை சந்தித்தது. இதேபோல் 2023 சீசனில் விளையாடிய டெல்லி அணி, 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது. ஐபிஎல் 2020ம் ஆண்டு மட்டுமே கடைசியாக டெல்லி அணி சிறப்பாக விளையாடி, இறுதி போட்டி வரை வந்தது. இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 8 வெற்றியை பெற்றிருந்தது. ஐபிஎல் 2020ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. எனவே, யுவராஜ் சிங்கின் வருகை டெல்லி அணிக்கு சாதகமாக அமைந்து, கோப்பையை வெல்லும் என்று நம்பப்படுகிறது. இதுவரை ஐபிஎல்லில் டெல்லி அணி கோப்பையை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: IPL 2025: ஐபிஎல்லில் முக்கிய வீரரை கழட்டி விடப்போகும் மும்பை இந்தியன்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

யுவராஜ் சிங்கின் ஐபிஎல் வாழ்க்கை:

ஐபிஎல்லில் யுவராஜ் சிங் இதுவரை 132 போட்டிகளில் விளையாடி 13 அரைசதங்கள் உள்பட 2750 ரன்கள் அடித்துள்ளார். மேலும், தனது பந்துவீச்சு மூலம் 36 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இதுபோக, இந்திய அணிக்காக யுவராஜ் சிங் இதுவரை 58 டி20 மற்றும் 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Latest News