5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL Retention Rule Explainer: ஐபிஎல் 2025ல் எத்தனை வீரர்கள் தக்க வைக்கலாம்..? என்னென்ன புதிய விதிகள் அறிமுகம்..? முழு விவரம் இங்கே!

IPL 2025 New Rules: அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஐபிஎல் 2025ல் வீரர்களின் தக்கவைத்துக்கொள்ளும் எண்ணிக்கை 4ல் இருந்து 6 ஆக பிசிசிஐ அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை ஏல தொகையும் அதிகரித்துள்ள நிலையில், முதல் முறையாக போட்டி கட்டணம் செலுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.

IPL Retention Rule Explainer: ஐபிஎல் 2025ல் எத்தனை வீரர்கள் தக்க வைக்கலாம்..? என்னென்ன புதிய விதிகள் அறிமுகம்..? முழு விவரம் இங்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Image: PTI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 29 Sep 2024 10:45 AM

ஐபிஎல் 2025 அடுத்த சீசன் மெகா ஏலம் தொடர்பான முக்கிய விதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நேற்று (செப்டம்பர் 28ம் தேதி) சனிக்கிழமையன்று நடந்த ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ இந்த விதிகளை அறிவித்தது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே இம்முறை வீரர்களின் தக்கவைத்துக்கொள்ளும் எண்ணிக்கை 4ல் இருந்து 6 ஆக பிசிசிஐ அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறை ஏல தொகையும் அதிகரித்துள்ள நிலையில், முதல் முறையாக போட்டி கட்டணம் செலுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. இது மட்டுமின்றி, ஏலத்தில் விற்கப்பட்டாலும், சீசன் தொடங்குவதற்கு சற்று முன் தங்கள் பெயரை திரும்பப் பெறும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அத்தகைய வீரர்கள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

ALSO READ: Musheer Khan Car Accident: சாலை விபத்தில் தந்தையுடன் சிக்கிய முஷீர் கான்.. சிகிச்சை தர மும்பை கொண்டுபோகும் பிசிசிஐ!

என்னென்ன விதிகள்..?

  • முதல் முறையாக போட்டிக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் விளையாடும் பதினொன்றில் உள்ள ஒவ்வொரு வீரரும் (இம்பேக்ட் வீரர் உள்பட) ஒரு போட்டியில் விளையாடுவதற்கு ரூ.7.5 லட்சம் சம்பளமாக பெறுவார்கள். இதற்காக, உரிமையாளர்கள் ஆண்டு ரூ. 12.60 கோடியை அணிக்காக ஒதுக்க வேண்டும். இது ஏலத்தில் வீரர்களை எடுக்கும் பணத்தோடு சேராது. ஏலத்திற்கான பணத்தையும் அணி நிர்வாகம் வீரர்களுக்கு வழங்க வேண்டும்.
  • அதிக பணம் சம்பாதிக்கும் முயற்சியில், மினி ஏலத்தில் மட்டும் வரும் வெளிநாட்டு வீரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வெளிநாட்டு வீரரும் மெகா ஏலத்திற்கு தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். ஒரு வேளை இந்த ஆண்டு மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர் பதிவு செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் வீரர் ஏலத்தில் பதிவு செய்ய தகுதியற்றவராகி விடுவார்.
  • அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும், இதில் ஆர்டிஎம்மும் அடங்கும். ஒரு அணி 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டால், ஏலத்தின் போது ஒரு ஆர்டிஎம்-ஐ பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளும்போது, ​​அணிகள் 5 கேப்டு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம். மேலும் ஒரு அன் கேப்டு வீரரையும் சேர்த்து கொள்ளலாம்.
  • உரிமையாளரால் தக்கவைக்கப்படும் ஆறு வீரர்களில், குறைந்தபட்சம் ஒரு வீரராவது ஒரு இந்திய வீரராக இருக்க வேண்டும். மீதமுள்ள ஐந்து பேரும் இந்தியர்களாகவோ அல்லது வெளிநாட்டவர்களாகவோ இருக்கலாம். இது தவிர, அணி உரிமையாளர்கள் தக்கவைக்க அனுமதிக்கப்பட்ட ஆறு வீரர்களை நேரடித் தக்கவைப்பு மற்றும் ஆர்டிஎம் விருப்பங்களின் கீழ் தக்கவைத்துக் கொள்ளலாம்.
  • ஐபிஎல் 2025ல் ஏல பர்ஸ் கடந்த சீசன் வரை ரூ. 100 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த ஆண்டு முதல் ஏல பர்ஸ் ரூ.100 கோடியில் இருந்து ரூ.120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மொத்த சம்பள வரம்பு தற்போது ரூ.110 கோடியில் இருந்து ரூ.146 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் ரூ.120 கோடி ஏலப் பணமாகவும், ரூ.12.60 கோடி போட்டிக் கட்டணமாகவும், மீதமுள்ளவை ஊதியமாகவும் இருக்கும். இந்த சம்பள வரம்பு வருகின்ற 2026ல் ரூ.151 கோடியாகவும், 2027ல் ரூ.157 கோடியாகவும் உயரும்.
  • கடந்த சில ஆண்டுகளாக ஏலத்தில் எடுத்த வீரர்கள் ஐபிஎல் தொடங்க சில நாட்களுக்கு முன்பு தாங்கள் பங்கேற்கவில்லை என தெரிவிப்பார்கள். இதுகுறித்து அணி நிர்வாகம் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி, ஏலத்தில் வாங்கப்பட்ட பிறகு, சீசன் தொடங்குவதற்கு முன், எந்த வீரரும் தனது பெயரை திரும்பப் பெற்றால், அடுத்த இரண்டு சீசன்களுக்கான ஏலத்திலும் போட்டியிலும் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
  • எந்த ஒரு இந்திய வீரரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலோ, கடந்த 5 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தாலோ அல்லது பிசிசிஐயின் மைய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றாலோ, அந்த வீரர் அன் கேப்டு வீரராகவே விளையாட வேண்டும். (இதன் கீழ்தான் எம்.எஸ்.தோனி விளையாடுவார்)
  • கடந்த சில ஆண்டுகளால இம்பேக்ட் வீரர் விதி குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வந்தது. வருகின்ற ஆண்டு முதல் இம்பேக்ட் பிளேயர் விதி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தை பிசிசிஐ தக்க வைத்துள்ளது. இதையடுத்து, இம்பாக்ட் பிளேயர் 2025 முதல் 2027 வரை தொடரும்.
  • 2025 ஏலத்தில் இந்திய வீரரின் அதிகபட்ச ஏலத்தொகை ரூ.16 கோடி என்றால், 2026 ஏலத்தில் எந்த வெளிநாட்டு வீரரும் ரூ.16 கோடிக்கு மேல் பெற முடியாது. அதேபோல், இந்த ஏலத்தில் இந்தியர் ஒருவர் ரூ.18 கோடிக்கு மேல் விற்கப்பட்டால், வெளிநாட்டு வீரர் அதிகபட்சமாக ரூ.18 கோடியை ஏலத்தில் பெற முடியும். ஒருவேளை, ஒரு வெளிநாட்டு வீரர் ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டால், மீதமுள்ள ரூ.7 கோடி அல்லது ரூ.9 கோடி வீரர்களின் நலனுக்காக பிசிசிஐக்கு வழங்கப்படும்.

ALSO READ: IND vs BAN 2nd Test: 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டி.. கான்பூரில் இந்திய அணி இதுவரை எப்படி..?

தக்க வைக்கப்படும் வீரர்களின் சம்பளம் என்னவாக இருக்கும்..?

ஒரு அணியில் முதலில் தக்கவைக்கப்படும் வீரரின் மதிப்பு ரூ.18 கோடி. இரண்டாவது வீரர் ரூ.14 கோடியும், மூன்றாவது வீரரின் மதிப்பு ரூ.11 கோடியும் இருக்கும். அதேபோல், நான்காவது வீரரின் மதிப்பு ரூ.18 கோடியாகவும், ஐந்தாவது வீரரின் மதிப்பு ரூ.14 கோடியாகவும் இருக்கும்.

Latest News