5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Suryakumar Yadav: கேப்டனாக அழைக்கும் கொல்கத்தா.. மும்பையை விட்டு வெளியேறுவாரா சூர்யகுமார் யாதவ்..?

IPL 2025: ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவ் வந்த பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி மேலும் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில், ஐபிஎல் 2025ல் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி, வேறு சில அணியில் இணைந்து விளையாட இருப்பதாக செய்திகள் வருகின்றன.

Suryakumar Yadav: கேப்டனாக அழைக்கும் கொல்கத்தா.. மும்பையை விட்டு வெளியேறுவாரா சூர்யகுமார் யாதவ்..?
சூர்யகுமார் யாதவ்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 25 Aug 2024 12:44 PM

சூர்யகுமார் யாதவ்: இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) 2025க்கு முன் வருகின்ற டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டி20யின் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவ் வந்த பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி மேலும் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில், ஐபிஎல் 2025ல் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி, வேறு சில அணியில் இணைந்து விளையாட இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ALSO READ: IPL 2025: பயிற்சியாளராக யுவராஜ் சிங்! ஒப்பந்தம் போட்ட டெல்லி..? வெளியான தகவல்!

சூர்யகுமார் யாதவ்:

ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக பல தகவல்கள் வெளியாகின. இதில், ரோஹித் சர்மா மும்பையை விட்டு கொல்கத்தா அணிக்கு செல்ல இருப்பதாக பேசப்பட்டது. தற்போது இது தொடர்பாக மற்றொரு அப்டேட் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டனான பிறகு, மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படவில்லை.

அதன் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணியின் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன் பதவியை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பை சூர்யகுமார் யாதவ் ஏற்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வாய்ப்பை சூர்யா ஏற்றுக்கொண்டால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அவரை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

ஷ்ரேயாஸ் ஐயர்..?

ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ், 2014ம் ஆண்டு இணைந்தார். அந்த அணிக்காக நிறைய ரன்களை அடித்தார். ஆனால், 2018 ஐபிஎல் போட்டிக்கு முன் கொல்கத்தா அணியால் விடுவிக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் இணைந்தார்.

ALSO READ: Vijayakanth Birthday: மறைவுக்குபின் முதல் பிறந்தநாள்..! விஜயகாந்தின் கல்வி முதல் மறைவு வரை.. முழு விவரம் இங்கே!

சூர்யகுமார் யாதவ் இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 24 அரைசதங்கள் உதவியுடன் 3594 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இருப்பினும், தற்போது கேகேஆர் அணி தனது அணியின் கேப்டனை மாற்றம் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் வேறு சில அணிக்கு சென்று கேப்டன் பதவி வகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக்க முயற்சி செய்வதாகவும் தெரிகிறது.

Latest News