5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: தோனி ஓய்வா? ரிஷப் பண்ட் மீது கண் வைத்த சிஎஸ்கே.. கெய்க்வாட் கேப்டன் இல்லையா?

Rishabh Pant: மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றால், சிஎஸ்கே அணிக்கு கண்டிப்பாக புதிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தேவையாக உள்ளது. இதன் காரணமாக வருகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனிக்கு மாற்றுவீரராக சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது ரிஷப் பண்ட்தான். தோனிக்கு சரியான மாற்று வீரராக இப்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் உள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது.

IPL 2025: தோனி ஓய்வா? ரிஷப் பண்ட் மீது கண் வைத்த சிஎஸ்கே.. கெய்க்வாட் கேப்டன் இல்லையா?
தோனி – ரிஷப் பண்ட் (Image: twitter)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 27 Sep 2024 10:24 AM

எம்.எஸ்.தோனி: ஐபிஎல் 2025க்கான ஆயுத்த பணிகளை பிசிசிஐ முழுவீச்சில் செய்து வருகிறது. ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, வருகின்ற டிசம்பர் மாதம் மெகா ஏலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலமானது ஐபிஎல் 2022க்கு பிறகு முதல் முறையாக நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவிக்கப்பட்ட அணியின் விவரத்தை வெளியிட வேண்டும். இப்படியான சூழ்நிலையில், அனைவரின் பார்வையும் நிச்சயமாக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது இருக்கும். இந்த அணியில் என்ன மாற்றங்கள் இருக்கும் என்பதை பார்க்கவே எல்லாரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக வருகின்ற ஐபிஎல் 2025 சீசனில் மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த சீசனில் எம்.எஸ்.தோனி தான் வகித்த கேப்டன் பதவியில் இருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தலைமை பதவியை வழங்கினார். இதேபோல், இந்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் நிறைய மாற்றங்களை காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: IPL 2025: ஐபிஎல் 2025ல் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லையா? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

ஓய்வு பெறுகிறாரா தோனி..?

கடந்த சில மாதங்களாக ஐபிஎல் 2025 சீசனில் தோனி விளையாடுவார் என்று கூறப்பட்டு வந்தது. சிஎஸ்கே தோனியை தக்க வைத்துகொண்டு, மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்றும் செய்திகள் வெளி வந்தன. தோனியை சிஎஸ்கே தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியானது. ஐபிஎல்லில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் கடந்த ஒருவர், அன் கேப்டு வீரராக களமிறங்கலாம். இந்த விதியானது கடந்த 2021ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் இருந்தது. இருப்பினும், இந்த விதிக்கு பிசிசிஐ ஒப்புதல் தரவில்லை என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறலாம் என்று தெரிகிறது.

அடுத்த விக்கெட் கீப்பர் யார்..?

மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றால், சிஎஸ்கே அணிக்கு கண்டிப்பாக புதிய விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் தேவையாக உள்ளது. இதன் காரணமாக வருகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனிக்கு மாற்றுவீரராக சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது ரிஷப் பண்ட்தான். தோனிக்கு சரியான மாற்று வீரராக இப்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் உள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது. ரிஷப் பண்டை தக்க வைத்துக்கொள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விரும்பவில்லை என்றாலும், கேப்டன்சியை வேறு யாருக்காவது வழங்கலாம். ஒருவேளை ஐபிஎல் 2025க்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் பந்தை விடுவித்தால், தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட்-ஐ சென்னை அணி வாங்கலாம். தோனி இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவில்லை என்றால், இந்திய அணியின் அடுத்த சிறந்த விக்கெட் கீப்பரை கொண்டு வர சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சிஎஸ்கே அணியில் கேப்டன் மாற்றமா..?

எம்.எஸ். தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம் பிடித்தால் கேப்டன் பதவியிலும் மாற்றம் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யோசிக்கலாம். ஐபிஎல் 2024க்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டை புதிய கேப்டனாக தேர்வு செய்தது. ஆனால், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றில் இது மூன்றாவது முறையாக நடந்தது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி 14 போட்டிகளில் விளையாடி 7 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் காரணமாக சென்னை அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தை மட்டுமே பிடித்தது. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ மெகா ஏலத்தில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக கேப்டனாக நியமிக்கலாம்.

ALSO READ: MS Dhoni: ஐபிஎல் போட்டிக்கு டாட்டா காட்டுகிறாரா தோனி?.. சிஎஸ்கே வெளியிட்ட ட்வீட்!

ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் செயல்திறன்:

வங்கதேசத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு ஏலத்தில் டெல்லி அணி பண்ட் – ஐ வாங்கியது. அன்றிலிருந்து டெல்லி அணிக்காக பண்ட் தொடர்ந்து விளையாடி வருகிறார். ரிஷப் பண்ட் இதுவரை 111 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 148.94 ஸ்ட்ரைக் ரேட்டில் 1 சதம் மற்றும் 18 அரைசதங்கள் உள்பட 3284 ரன்கள் எடுத்துள்ளார்.

Latest News