5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: ஐபிஎல் 2025ல் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லையா? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

BCCI: ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் சீசனை சுவாரஸ்யமாக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிகளை கொண்டு வருகிறது. இந்த விதிகளில் சில அப்படியே இருக்கும். வேண்டாத சில விதிகள் மாற்றப்படும். இப்படிப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பிறகு ஐபிஎல்லில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருபுறம், அணிகளை கட்டமைக்க அந்தந்த அணி நிர்வாகமும், மறுபுறம் புதிய விதிகள் ஐபிஎல் சீசனில் அறிமுகம் செய்ய பிசிசிஐயும் முடிவெடுக்கும்.

IPL 2025: ஐபிஎல் 2025ல் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லையா? பிசிசிஐ தீவிர ஆலோசனை!
இம்பேக்ட் பிளேயர் விதி (Image: Twitter)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 03 Sep 2024 12:47 PM

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் என்று அழைக்கப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் கடந்த 2008ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் சீசனை சுவாரஸ்யமாக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிகளை கொண்டு வருகிறது. இந்த விதிகளில் சில அப்படியே இருக்கும். வேண்டாத சில விதிகள் மாற்றப்படும். இப்படிப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பிறகு ஐபிஎல்லில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருபுறம், அணிகளை கட்டமைக்க அந்தந்த அணி நிர்வாகமும், மறுபுறம் புதிய விதிகள் ஐபிஎல் சீசனில் அறிமுகம் செய்ய பிசிசிஐயும் முடிவெடுக்கும். பிசிசிஐ தற்போது இதுபோன்ற இரண்டு விதிகளை பரிசீலித்து வருகிறது. அப்படி எந்த விதிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது..? எந்த விதிகள் நீக்கப்பட இருக்கிறது உள்ளிட்ட விதிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Paralympics 2024: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. பேட்மிண்டனில் கலக்கிய நிதேஷ் குமார்..!

கடந்த 2024 சீசனில் இரண்டு புதிய விதிகள்:

கடந்த 2023ம் ஆண்டு பிசிசிஐ இரண்டு புதிய விதிகளை அமல்படுத்தியது. இது கடந்த 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரை பெரிய விவாதமாக பேசப்பட்டது. இந்த விதிகளில் ஒன்று ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்களை அனுமதித்தல், மற்றொன்று, இம்பேக்ட் பிளேயர் விதி ஆகியவை அடங்கும். பவுன்சர் விதி குறித்து அதிக சர்ச்சைகள் இல்லை என்றாலும், இம்பேக்ட் பிளேயர் விதி அதிக விவாதத்தை கிளப்பியது.

ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள்:

சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவரில் ஒரு பவுன்சர் மட்டுமே வீச அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பு இதே விதிதான் ஐபிஎல்லில் இருந்தது. ஆனால், ஐபிஎல் 2023ல் பிசிசிஐ அதை மாற்றி ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்களை வீச அனுமதிக்கலாம் என தெரிவித்தது. முன்னதாக, இந்த விதியை சையத் முஷ்டாக் அலி டிராபியில் சோதனை மேற்கொண்ட பிறகு, ஐபிஎல்லில் கொண்டு வரப்பட்டது. பந்து வீச்சாளர்கள் இந்த விதியை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இருப்பினும், இப்போது இந்த விதியை திரும்பப் பெற பிசிசிஐ பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, வருகின்ற ஐபிஎல் 2025 சீசனில் ஒரு ஓவரில் ஒரு பவுன்சர் மட்டுமே அனுமதிக்கப்படலாம்.

இம்பேக்ட் பிளேயர் விதியும் மாற்றமா..?

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாவது முக்கியமான விதி இம்பாக்ட் பிளேயர் விதி. இது ஐபிஎல் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தது. இந்த விதியின் கீழ், போட்டியின் தொடக்கத்தில் கேப்டன் விளையாடும் 11 பேருடன், மேலும் 5 வீரர்கள் பட்டியலை தெரிவிக்க வேண்டும். அந்த 5 வீரர்கள் போட்டியின் போது எந்த நேரத்திலும் அணியில் சேரலாம். ஒரு புதிய வீரர் அணிக்கு வந்தால், அறிவிக்கப்பட்ட 11 அணியில் இருந்து ஒருவர் வெளியேற வேண்டும். இதன் காரணமாக, ஐபிஎல்லில் கடந்த ஆண்டு பல சாதனைகள் படைக்கப்பட்டது. இருப்பினும், சில வீரர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த விதி குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதால், அடுத்த ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதி இருக்குமா என்பது தெரியவில்லை.

ALSO READ: Thulasimathi Murugesan: விபத்தில் சேதமடைந்த கை.. தன்னம்பிக்கையை விடாத துளசிமதி.. வெள்ளி வென்று அசத்தல்!

இந்தநிலையில், இந்த இரண்டு விதிகளையும் அடுத்த ஐபிஎல் சீசனிலும் தொடர வேண்டுமா வேண்டாமா என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர் விதிகளை நீக்க வாய்ப்பு உள்ள நிலையில், இம்பேக்ட் பிளேயர் விதியை தொடர்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. விரைவில் இந்த விதிகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News