5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Praggnanandhaa: எப்போதும் திருநீறுடன் இருக்கும் பிரக்ஞானந்தா.. என்ன காரணம் தெரியுமா?

இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தை ரமேஷ்பாபு தமிழ்நாடு ஸ்டேட் கார்ப்ரேஷன் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சிறு வயதில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவர். அதனால் மகன், மகள் இருவரையும் தாய் நாகலட்சுமி தான் அனைத்து செஸ் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்வதை வழக்கமாக இன்றளவும் வழக்கமாக கொண்டுள்ளார்.

Praggnanandhaa: எப்போதும் திருநீறுடன் இருக்கும் பிரக்ஞானந்தா.. என்ன காரணம் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 26 Sep 2024 11:31 AM

செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்பவர் பிரக்ஞானந்தா. அவருக்கு அடையாளமாக எங்கு சென்றாலும் விபூதி இல்லாமல் அவரை பார்க்கவே முடியாது. அதன்பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. ஒரு பேட்டியில் பேசிய அவரது அக்கா வைஷாலி, “பிரக்ஞானந்தாவுக்கு விபூதி வைக்கும் பழக்கம் சின்ன வயதில் இருந்தே இருக்கிறது. பாட்டி உள்ளிட்டவர்கள் பழக்கி விட்ட அந்த பழக்கம் இன்றளவும் இடைவிடாமல் தொடர்கிறது. எங்கு போனாலும் அவனை விபூதி இல்லாமல் பார்க்க முடியாது. பிரக்ஞானந்தா எந்தவொரு போட்டிக்கும் முன்பும் பிரார்த்தனை செய்து விட்டு தான் தொடங்குவான். என்னுடைய அப்பா சின்ன வயதில் போலியாவால் பாதிக்கப்பட்டதால் நிறைய விஷயங்களில் அனுசரித்து செல்வதும், பல போராட்டங்களை கடந்தும் வந்தவர். பிரக்ஞானந்தாவுக்கு திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக தான் திருநீறு பூசி விடுவது பாட்டி தான். குழந்தைகளுக்கு பொட்டு வைப்பது போல தான் செய்வார்.

சின்ன வயதில் இருந்தே நானும் பிரக்ஞானந்தாவும் எல்லா விஷயத்துக்கும் சண்டை போடுவோம். எல்லா வீட்டிலும் இருப்பது போல டிவி ரிமோட்டுக்கு, சாப்பாடுக்கு என அனைத்திற்கும் சண்டை வரும். வீட்டில் எங்கள் இருவரின் மறக்க முடியாத தருணங்கள் புகைப்படங்களாகவும், நாங்கள் வாங்கிய மெடல்களும் வைத்திருப்போம்” என வைஷாலி தெரிவித்திருந்தார்.

Also Read: iPhone 16 Series : வெளிநாடுகளில் இந்தியாவை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படும் ஐபோன் 16.. எவ்வளவு தெரியுமா?

பிரக்ஞானந்தா பின்னணி

இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தை ரமேஷ்பாபு தமிழ்நாடு ஸ்டேட் கார்ப்ரேஷன் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சிறு வயதில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவர். அதனால் மகன், மகள் இருவரையும் தாய் நாகலட்சுமி தான் அனைத்து செஸ் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்வதை வழக்கமாக இன்றளவும் வழக்கமாக கொண்டுள்ளார். தனது மூன்றரை வயதிலேயே செஸ் விளையாட தொடங்கிய பிரக்ஞானந்தாவுக்கு ரோல் மாடல் அவரது அக்கா வைஷாலி தான்.

அன்றைய குடும்ப சூழலில் வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இருவரையும் ஒன்றாக செஸ் விளையாட வைப்பதில் சிரமம் இருந்துள்ளது. குடும்பத்தில் இருந்த பண நெருக்கடி காரணமாக தந்தை ரமேஷ் பாபு பிரக்ஞானந்தாவை செஸ் விளையாட வைக்க வேண்டாம் என்று நினைத்துள்ளார். ஆனால் அங்கு நடந்ததே வேறு. பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளராக கிராண்ட் மாஸ்டர் ஆர். பி.ரமேஷ் என்பவர் உள்ளார். அவர்தான் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு செஸ் பயிற்சியளிக்க எப்போதும் வாங்கும் கட்டணத்தை விட மிக குறைவாக வாங்கி உதவியுள்ளார்.

அதற்கு மிக முக்கிய காரணம் தான் பார்த்து வியந்த பிரக்ஞானந்தாவின் திறமையை உலகறிய செய்ய வேண்டும் என அவர் நினைத்தது தன. அதை எப்படியாவது வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதை பயிற்சியாளர் ரமேஷ் நோக்கமாக கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக பிரக்ஞானந்தா எந்தெந்த போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை சொல்லிக்கொண்டே வருவார்.

Also Read: Thirumavalavan : கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை கருத்து.. ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? திருமாவளவன் சொன்ன பதில்!

முதல்முறையாக பிரக்ஞானந்தாவின் செஸ் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த தருணம் எதுவென்றால் அது 8 வயதிற்குட்பட்ட உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி. அந்த போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அங்கு தொடங்கிய வெற்றிப்பயணம் தொடர்ச்சியாக பல போட்டிகளில் வெற்றி பெற காரணமாக அமைந்தது.

2018 ஆம் ஆண்டு இளம்வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அப்போது அவரின் வயது 12 ஆண்டுகள் 10 மாதம் 13 நாட்களாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியது மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்தது.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆன்லைன் வழியாக நடைபெற்ற அந்த போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார். அந்த வெற்றியை ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொண்டாடியது. ஏன் இந்தியாவே கொண்டாடியது என சொல்லலாம். மீண்டும் அதே ஆண்டின் மே மாதத்தில் நடைபெற்ற மற்றொரு ஆன்லைன் போட்டியில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இதனையடுத்து நடந்த FTX கிரிப்டோ கோப்பை 2022 போட்டியில் தொடர்ச்சியாக 3வது முறையாக மேக்னஸ் கார்ல்சனை வென்று அசாத்திய சாதனைப் படைத்தார்.

இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி, மகளிர் அணி ஆகியவை முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. இதில் ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா இடம் பெற்றிருந்தார். மகளிர் அணியில் அவரது சகோதரி ஆர்.வைஷாலி இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News