5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs BAN 1st test Highlights: அஸ்வின் எடுத்த இரட்டை அவதாரம்.. வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி கண்ட இந்திய அணி!

India vs Bangladesh 1st test Cricket Match Result: இந்தியா - வங்கதேசத்திற்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன்மூலம், நான்காவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 515 இலக்கை துரத்திய வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்.

IND vs BAN 1st test Highlights: அஸ்வின் எடுத்த இரட்டை அவதாரம்.. வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி கண்ட இந்திய அணி!
இந்தியா – வங்கதேசம் (Image: BCCI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 22 Sep 2024 12:47 PM

சென்னையில் நடைபெற்ற இந்தியா – வங்கதேசத்திற்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன்மூலம், நான்காவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 515 இலக்கை துரத்திய வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையில் கடந்த 19ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

ALSO READ: Watch Video: ’இங்க ஆளு இல்லை நிப்பாட்டுங்க’- வங்கதேசத்திற்கு பீல்டிங் செட் செய்த ரிஷப் பண்ட்..!

வங்கதேச அணி கேப்டன் சாண்டோ டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய வருமாறு அழைத்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பின்னர், இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து 7வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ரவிச்சந்திரன் அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை அள்ளினார்.

போட்டியில் நடந்தது என்ன..?

இப்போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 133 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்த வங்கதேச அணி இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அப்போது இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து, தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் முதல் விக்கெட் வீழ்ந்தது. ரோஹித் சர்மா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜாகிர் ஹசனிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து உள்ளே வந்த விராட் கோலியும் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் இந்திய அணி 67 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

இதையடுத்து சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி இன்னிங்ஸை கையில் எடுத்து வங்கதேச அணிக்கு சிம்ம சொற்பனமாக விளங்கினர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. பண்ட் 128 பந்துகளில் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 109 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் வாழ்க்கையில் பண்டின் ஆறாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பண்ட் அவுட் ஆன பிறகு கில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். சுப்மன் கில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இந்தியா 287 ரன்களுக்கு இன்னிங்ஸ் டிக்ளேர் செய்தது இதன்படி, இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இந்திய அணி வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.

ALSO READ: IND vs BAN 1st Test: ரிஷப் பண்ட், கில் அதிரடி சதம்.. வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..!

280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி:

இலக்கை துரத்திய வங்கதேச அணி மீண்டும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட் வேட்டையில் ஈடுபட வங்கதேச அணி 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக கேப்டன் நஸ்முல் ஹுசைன் சாண்டோ 82 ரன்கள் எடுத்தார். இதன்போது, இந்திய தரப்பில் மண்ணின் மைந்தன் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம், வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Latest News