5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ruturaj Gaikwad: முதல் பந்தில் பவுண்டரி.. அடுத்த பந்தில் வெளியேறிய ருதுராஜ்.. என்ன நடந்தது?

Ruturaj Gaikwad: முன்னதாக கடந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய சி அணி இந்தியா டி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய சி அணிக்காக கெய்க்வாட் 48 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். கடந்த டிசம்பரில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் கெய்க்வாட் இணைந்தபோது, அவரது கை விரல் காயம் ஏற்பட்டு விலகினார். அதன் பின்னர் கெய்க்வாட் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியவில்லை.

Ruturaj Gaikwad: முதல் பந்தில் பவுண்டரி.. அடுத்த பந்தில் வெளியேறிய ருதுராஜ்.. என்ன நடந்தது?
ருதுராஜ் கெய்க்வாட் (Image: twitter)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 12 Sep 2024 14:14 PM

ருதுராஜ் கெய்க்வாட்: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. அதே நேரத்தில் துலீப் டிராபியின் இரண்டாவது சுற்று இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வங்கதேச தொடருக்கு தேர்வு செய்யப்படாத வீரர்கள் துலீப் டிராபியில் களமிறங்கி தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று இந்தியா சி அணிக்கும், பி அணிக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கியபோது, இந்தியா சி அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்ய வந்து திடீரென திரும்பி சென்றார். ஏன் இப்படி நடந்தது என்று தெரியாமல் ருதுராஜ் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். மேலும் எக்ஸ் என்று அழைக்கப்படும் ட்விட்டரில் ருதுராஜ் கெய்க்வாட் பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ருதுராக் கெய்க்வாட் வங்கதேசத்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்றாலும், அதே அணிக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: IPL 2025: தோனி ஓய்வா? ரிஷப் பண்ட் மீது கண் வைத்த சிஎஸ்கே.. கெய்க்வாட் கேப்டன் இல்லையா?

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு என்ன ஆனது..?

அனந்தபூரில் உள்ள ரூரல் டெவலப்மெண்ட் ஸ்டேடியத்தில் இந்தியா பி மற்றும் சி அணிகள் களமிறங்கினர். டாஸ் வென்ற இந்திய பி கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், ரிதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய சி அணிக்கு முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை வழங்கினார். இதையடுத்து சாய் சுதர்சனுடன் ஓப்பனிங் செய்ய கிரீஸுக்கு வந்த கெய்க்வாட் முதல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்து சிறப்பான தொடக்கம் அளித்தார். ஆனால், இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் காயம் அடைந்தார். அதன் பிறகு அவர் மைதானத்தை விட்டு வெளியேறவே, கெய்க்வாட் ஏன் மைதானத்தை விட்டு வெளியேறினார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதையடுத்து கெய்க்வாட்க்கு பதிலாக ரஜத் படிதார் மூன்றாவது இடத்தில் களமிறங்கினார். முகேஷ் குமாரின் முதல் பந்திலேயே கெய்க்வாட் ஒரு பவுண்டரி அடித்தார்.

ருதுராஜ் கெய்க்வாட்டின் காயம் பெரியதா அல்லது சிறியதா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. கெய்க்வாட் மீண்டும் பேட்டிங் செய்ய களம் இறங்குவாரா என்பது தெரியவில்லை. இது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், கெய்க்வாட் காயம் பெரிதாகிவிடக்கூடாது என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இஷான் கிஷன்:

இந்தியா பி அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்தியா சி அணியில் விளையாடு லெவனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துருவ் ஜூரலுக்குப் பதிலாக இஷான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது பேட்டிங் செய்து வரும் இந்திய சி அணியில் களமிறங்கிய இஷான் கிஷன் 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறார்.

கடந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் எப்படி..?

முன்னதாக கடந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய சி அணி இந்தியா டி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய சி அணிக்காக கெய்க்வாட் 48 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். கடந்த டிசம்பரில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் கெய்க்வாட் இணைந்தபோது, அவரது கை விரல் காயம் ஏற்பட்டு விலகினார். அதன் பின்னர் கெய்க்வாட் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியவில்லை.

ALSO READ: IPL 2025: ஜாம்பவானை குறிவைத்து தூக்கிய லக்னோ.. வழிகாட்டியாக களமிறங்கும் ஜாகீர் கான்..!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்திய அணியில் ரிதுராஜ் கெய்க்வாட் இடம்பெறவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட்டின் செயல்பாடு எப்போதும் சிறப்பாகவே இருந்து வருகிறது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்தியா வருகின்ற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடிக்க வேண்டுமென்றால் துலீப் டிராபியில் சிறப்பாக விளையாட வேண்டியது மிக முக்கியம்

Latest News