5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs BAN: விரைவில் இந்தியா – வங்கதேச டெஸ்ட் தொடர்.. பல சாதனைகளை கோலி, அஸ்வின் முறியடிக்க வாய்ப்பு!

Virat Kohli: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டை இருக்கிறார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி 152 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9, 000 ரன்களை நிறைவு செய்வார். இதன்மூலம், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைப்பார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோர் மட்டுமே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

IND vs BAN: விரைவில் இந்தியா – வங்கதேச டெஸ்ட் தொடர்.. பல சாதனைகளை கோலி, அஸ்வின் முறியடிக்க வாய்ப்பு!
விராட் கோலி – அஸ்வின் (Image: twitter)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 04 Oct 2024 09:03 AM

டெஸ்ட் தொடர்: இந்தியா – வங்கதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும், 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 27ம் தேதி நடக்கிறது. இந்தியா மற்றும் வங்கதேச இடையே இதுவரை நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில், இந்திய அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், வங்கதேச அணி வெற்றி பெற்றதே கிடையாது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. சமீபத்தில் வங்கதேசம் சொந்த மண்ணில் பாகிஸ்தானை 2-0 என வீழ்த்தியது. இதன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேச அணி முதன்முறையாக கைப்பற்றியது. இந்தநிலையில், இந்தியா – வங்கதேச டெஸ்ட் தொடரில் படைக்கப்படவுள்ள சாதனை பட்டியலை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Ind vs Ban: 24 ஆண்டுகால டெஸ்ட் வரலாறு.. இதுவரை இந்தியா- வங்கதேசம் மோதலில் யார் ஆதிக்கம்?

விராட் கோலி:

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டை இருக்கிறார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி 152 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9, 000 ரன்களை நிறைவு செய்வார். இதன்மூலம், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைப்பார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோர் மட்டுமே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். விராட் கோலி தற்போது 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49.15 சராசரியில் 29 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 8848 ரன்கள் எடுத்துள்ளார்.

ரோஹித் சர்மா:

இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 7 சிக்ஸர்கள் அடித்தால், இந்திய ஜாம்பவான் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடிப்பார். இதுவரை இந்தியாவுக்காக சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதே நேரத்தில் ரோஹித் சர்மா இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 84 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

பிராட்மேனின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி..?

9 மாத இடைவெளிக்கு பிறகு விராட் கோலி மீண்டும் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்க உள்ளார். டான் பிராட்மேன் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 29 சதங்களை அடித்துள்ளார். அதேபோல், விராட் கோலியும் தற்போது வரை தனது பெயரில் 29 சதங்களை பதிவு செய்துள்ளார். எனவே, கோலி பிராட்மேனை முந்துவதற்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே உள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தால், பிராட்மேனின் 29 சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் அடித்து இந்திய பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஜாகீர் சாதனை முறியடிக்க வாய்ப்பு:

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீன் கானின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் ஜாகீர் கான். ஜாகீர் கான் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில், அஸ்வின் இதுவரை வங்கதேசத்துக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் 23 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். வரும் வங்கதேச தொடரில் அஸ்வின் 9 விக்கெட்களை வீழ்த்தினால், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார்.

ALSO READ: IND vs BAN: 634 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் பண்ட்.. வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

மேலும் ஒரு சாதனை கோலி முறியடிக்க வாய்ப்பு:

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சேட்டேஷ்வர் புஜாராவை விராட் கோலி முறியடிக்க இன்னும் 32 ரன்கள் மட்டுமே உள்ளது. இந்தியாவுக்கு எதிரான வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்த ரன்களை அடித்தால், வங்கதேசத்துக்கு எதிராக புஜாரா எடுத்த 468 ரன்களை கோலி தாண்டிவிடுவார். அதேபோல், இந்த பட்டியலில் ராகுல் டிராவிட்டை முந்துவதற்கும் கோலிக்கு வாய்ப்பு உள்ளது. டிராவிட்டை வீழ்த்த வீழ்த்த கோஹ்லி 124 ரன்கள் எடுக்க வேண்டும்.  அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 820 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Latest News