5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs BAN 2nd Test: 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டி.. கான்பூரில் இந்திய அணி இதுவரை எப்படி..?

IND vs BAN: இந்தியா - வங்கதேசத்திற்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை முதல் கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வங்கதேச அணியை வீழ்த்தி க்ளீன் ஸ்வீப் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்திய அணி விரும்பும். இந்தநிலையில், கான்பூர் ஸ்டேடியத்தில் இந்திய அணி எப்படி செயல்பட்டுள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

IND vs BAN 2nd Test: 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டி.. கான்பூரில் இந்திய அணி இதுவரை எப்படி..?
இந்திய அணி (Image: BCCI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 26 Sep 2024 13:22 PM

இந்தியா – வங்கதேசத்திற்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பலம் மிக்க இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன்மூலம், 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை முதல் கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வங்கதேச அணியை வீழ்த்தி க்ளீன் ஸ்வீப் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்திய அணி விரும்பும். இந்தநிலையில், கான்பூர் ஸ்டேடியத்தில் இந்திய அணி எப்படி செயல்பட்டுள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: IND vs BAN 2nd test Live Streaming: இந்தியா – வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்.. இந்த போட்டி எப்போது, எங்கு தொடங்குகிறது..?

கான்பூரில் இந்திய அணியின் செயல்பாடு:

கடந்த 1952ம் ஆண்டு முதல் இந்திய அணி கான்பூரில் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 23 போட்டிகளில் 7ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இங்கு இந்திய அணி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், 13 போட்டிகளை டிரா செய்துள்ளது. கான்பூரில் கடந்த 41 ஆண்டுகளாக இந்திய அணி தோல்வி என்பதை சந்தித்தது இல்லை. இறுதியாக, கடந்த 1983ம் ஆண்டு கான்பூரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு எந்த அணியாலும் இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை. எனவே, கான்பூரில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது வங்கதேச அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

கடைசி போட்டி டிரா:

கான்பூரில் இந்திய அணி கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கான்பூரில் களமிறங்குவதால் எப்படி விளையாடும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ALSO READ: IND VS BAN 2nd Test: கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்த பிசிசிஐ.. மீண்டும் மிரட்டுமா ரோஹித் படை..?

மழையால் போட்டி பாதிப்பா..?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெறும் கான்பூரில் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் ஆட்டத்தில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 27ம் தேதி கான்பூரில் 93 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இது தவிர 28,29 ஆகிய தேதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் அக்யூவெதர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒருவேளை இந்த போட்டி மழையால் ரத்தானால் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் பின் தங்கும் நிலை ஏற்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், இந்திய அணி குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெறுவது முக்கியம். வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பிறகு, இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்பிறகு, பார்டர் – கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

டெஸ்ட் தொடருக்கான இரு அணிகளின் விவரம்:

இந்திய டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி:

நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், முஷ்பிகர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷத்மான் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன், மெஹ்தி ஹசன் மிராஜ், ஜாகர் அலி அனிக், தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ஹசன் மஹ்மூத், தைஜுல் இஸ்லாம். ஹசன் ஜாய், நஹித் ராணா, காலித் அகமது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயாள்.

 

Latest News