5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

MS Dhoni: ஐபிஎல் போட்டிக்கு டாட்டா காட்டுகிறாரா தோனி?.. சிஎஸ்கே வெளியிட்ட ட்வீட்!

Chennai Super Kings: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் அவர் ஓய்வு பெறுவதை அறிவிக்கும் விதமாக தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கினார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி தொடர்ந்து சொதப்பியதால் சில போட்டிகளுக்குப் பின் மீண்டும் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். இப்படியான நிலையில் நடப்பாண்டு நடைபெற்ற சீசனில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக தனது கேப்டன் பதவியை இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார்.

MS Dhoni: ஐபிஎல் போட்டிக்கு டாட்டா காட்டுகிறாரா தோனி?.. சிஎஸ்கே வெளியிட்ட ட்வீட்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 27 Sep 2024 10:24 AM

எம்.எஸ். தோனி:சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மகேந்திர சிங் தோனி குறித்து போட்ட ட்வீட் ஒன்று ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ட்விட் மூலம் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதில் விசில், தோனி அணிந்திருந்த ஜெர்ஸி, சேப்பாக்கம் மைதானம், சென்னை அணியின் கொடி உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். இந்த ஒரு விளையாட்டுக்கு மட்டும் தான் அனைத்து உலக நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இப்படியான ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் பல்வேறு விதமான வடிவங்களில் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து கிரிக்கெட்டில் பல விதிகளும், வடிவங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

அத்தகைய கிரிக்கெட் வடிவங்களில் ஒன்றுதான் ஐபிஎல் தொடர். இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் இதுவரை 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் நட்சத்திர வீரராகவும் இருந்து ஐந்து முறை அந்த அணிக்கு வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. இது தவிர இரண்டு முறை சாம்பியன்ஸ் கோப்பையை அவரது தலைமையிலான சென்னை அணி வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் ஏராளமான சாதனைகளை தனிப்பட்ட வகையிலும் சரி, தான் விளையாடிய சென்னை அணிக்கும் சரி சொந்தமாக வைத்துள்ள தோனி 43 வயதாகி விட்டதால் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்தது.

முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் அவர் ஓய்வு பெறுவதை அறிவிக்கும் விதமாக தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கினார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி தொடர்ந்து சொதப்பியதால் சில போட்டிகளுக்குப் பின் மீண்டும் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். இப்படியான நிலையில் நடப்பாண்டு நடைபெற்ற சீசனில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக தனது கேப்டன் பதவியை இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார்.

விடை பெறுகிறார் தோனி?

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சகாப்தமாக திகழ்ந்தவர் தோனி. இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை 2007 ஆம் ஆண்டில் இருந்து ஏற்றவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். 43 வயதாகி விட்ட தோனி கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். அதேசமயம் தோனிக்கு மூட்டுவலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

இந்தாண்டு ஐபிஎல் சீசனில் அவர் மிகப்பெரிய அளவில் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டார். இதனால் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பார் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தோனியின் மூட்டுவலி பிரச்னை தீர்வது போல் தெரியவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் தோனி வரும் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்வீட் ஒன்றை போட்டு விட்டு அதில் மேஜர் மிஸ்ஸிங் என தெரிவித்தது. இது தோனியின் ரசிகர்களை சற்று கலக்கமடைய செய்திருக்கிறது.  ஒருவேளை தோனி அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்பதை சென்னை அணி மறைமுகமாக தெரிவிக்கிறதா? என பலரும் தெரிவித்து வருகின்றனர். தோனி மற்ற வீரர்களை போல ஓய்வை அறிவிக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எல்லோரும் 2020 ஆம் ஆண்டில் கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கில் சிக்கி திணறிய நிலையில் திடீரென ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார்.

மேலும் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை 2008 ஆம் ஆண்டு தொடங்கி நீண்ட காலம் ஒரு அணியில் கேப்டனாக தொடர்ச்சியாக இருந்தவர் என்ற பெருமையை தோனி தான் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News