5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2024 : RCB வென்றது எப்படி? CSK குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்!

RCB vs CSK : நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோற்கடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. மழையினால் போட்டி பாதிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியை வீழ்த்தி தங்களது சொந்த மைதானத்தில் மீண்டும் வெற்றியை பதிவு செய்தது. அதன்பின்னர் ஓய்வு அறையில் அணி வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

c-murugadoss
CMDoss | Updated On: 20 May 2024 09:53 AM

10 அணிகள் பங்கேற்ற 17-வது ஐபிஎல் சீசனின் 68-வது லீக் போட்டியில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 27 ரன்களில் சென்னை அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. ஐபிஎல் போட்டிகளில் போடப்படும் டாஸ்ஸை சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் பெரும்பாலும் வென்றதில்லை. ருத்துராஜ் கெய்க்வாட் நான் டாஸ் போட்டு எப்படி வெற்றி பெறவேண்டும் என்று பயிற்சி மேற்கொள்கிறேன் என்றும் தனது ஆதங்கத்தை கூறியிருந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், டாஸில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், சிஎஸ்கே அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்க்கு 218 ரன்கள் எடுத்தது. 219 ரன்கள் எடுத்தால் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Follow Us
Latest Stories