5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Purattasi Born Babies: புரட்டாசி மாதமும் குழந்தை பிறப்பும்.. தேவையற்ற பயத்துக்கு விளக்கம் இதோ!

பெருமாளுக்கு உகந்த மாதம் என கொண்டாடப்படும் இம்மாதத்தில் தான் நவராத்திரி, திருப்பதி பிரம்மோற்சவம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறும். இத்தகைய புரட்டாசி மாதம் குழந்தை பிறந்தால் நல்லதா?, அல்லது ஏற்கனவே பிறந்த குழந்தை எப்படிப்பட்ட பண்புகளோடு வளரும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.  பொதுவாக குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்வான தருணம், நெகிழ்ச்சியான தருணம் என சொல்லலாம்.

Purattasi Born Babies: புரட்டாசி மாதமும் குழந்தை பிறப்பும்.. தேவையற்ற பயத்துக்கு விளக்கம் இதோ!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 24 Sep 2024 18:00 PM

புரட்டாசி மாதம்: பருவநிலை மாறுபாடு என்பது ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒருமுறை நடக்கும். அந்த மாதங்களுக்கு எல்லாஅம் அடிப்படையாக தமிழ் மாதங்களில் ஒன்று அமையும். அப்படியாக வெப்பம், காற்று ஆகியவைகளை தாண்டி வரப்போகும் காலம் மழைக்காலம். அந்த மழைக்காலத்தில் அடிப்படையாக அமைவது தான் புரட்டாசி. பெருமாளுக்கு உகந்த மாதம் என கொண்டாடப்படும் இம்மாதத்தில் தான் நவராத்திரி, திருப்பதி பிரம்மோற்சவம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறும். இத்தகைய புரட்டாசி மாதம் குழந்தை பிறந்தால் நல்லதா?, அல்லது ஏற்கனவே பிறந்த குழந்தை எப்படிப்பட்ட பண்புகளோடு வளரும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.  பொதுவாக குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்வான தருணம், நெகிழ்ச்சியான தருணம் என சொல்லலாம். குழந்தை பிறக்கும் நாள் நல்ல தினமாக, நல்ல மாதமாக, நல்ல வண்ணமாக அமைய வேண்டும் என அந்த 9 மாதமும் நினைப்போம்.

Also Read:Navratri: நவராத்திரி பூஜை முறை… 1ம் நாள் முதல் 9ம் நாள் வரை முழு விவரம்!

அப்படியான மாதமாக புரட்டாசி அமைந்தால் எப்படி இருக்கும்? என்பதை பார்க்கலாம். பொதுவாகவே புரட்டாசியில் குழந்தை பிறந்தால் புரட்டி புரட்டி எடுக்கும் என சொல்வார்கள். அதனாலேயே பலருக்கும் இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழும்.

புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் என சொல்கிறோம். அதேபோல் சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்ககூடிய மாதம் இந்த மாதமாகும். அதன் காரணமாக புதன் கிரகம் வலுப்பெறும். புத்திக்கு உரிய கிரகமான புதன் அமைப்பை வைத்து தான் ஒருவரின் கல்வி, அறிவு நிலையை ஜோதிடத்தில் கணக்கிடுவார்கள். அப்படியான புதனுக்கு உகந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் அது எப்படி இருக்கும் என நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். நிச்சயம் புரட்டாசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் அறிவுச்சார்ந்த, புத்திக்கூர்மைக்கொண்ட குழந்தையாக இருக்கும். அதனால் இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் கவலையை விடுங்கள்.

மகாலட்சுமிக்கு உரிய மாதமாக புரட்டாசி திகழ்வதால் இம்மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் செல்வ செழிப்புடன் வாழும். அவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து மீண்டு செல்வ வளம் பெறுவார்கள். நாம் ஒருமுறை சொன்னால் போதும் அதை மனதில் ஏற்றிக்கொள்ளக்கூடிய கற்பூர புத்தி கொண்ட புத்திக்கூர்மை உடையவர்களாக இம்மாத குழந்தைகள் திகழ்வார்கள். இவர்களிடத்தில் சோம்பல் என்ற ஒன்றே இருக்காது. தனித்தன்மையுடன் கூடிய சுறுசுறுப்பு இருக்கும். நல்ல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். கவிதை, பாடல் எழுவதுவது உள்ளிட்ட கலைஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Also Read: Bank Holiday : அக்டோபர் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது.. முழு விவரம் இதோ!

புரட்டாசி மாதத்தில் அவதரித்த மகான் தான் வள்ளலார் பெருமான் ராமலிங்க அடிகள். இறைவனை சிலையாக வழிபடலாம் என்பதை தாண்டி ஜோதி வடிவிலும் வழிபாடு செய்யலாம் என்ற உண்மையை உணர்த்தியவர் அவர். அவரைப் போல ஒரு ஞானியை நாம் எங்கும் பார்க்க முடியாது. இன்னொரு உயிரின் துன்பத்தையும் தனக்குரியதாக கொண்டவர். அவர் பிறந்த மாதம் தான் புரட்டாசி என்பதால் நிச்சயம் உங்கள் குழந்தையும் வாழ்க்கையில் மிகப்பெரிய நிலையை அடையும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக உடலளவில் பிரச்னை உண்டாகலாம் என்பதால் இம்மாதத்தில் அசைவம் சாப்பிட வேண்டாம் என சொல்கிறார்கள். அப்படியிருக்கும் நிலையில் பருவநிலை மாற்றம் குழந்தை உடல்நலத்தில் ஏதேனும் பிரச்னையை உண்டாக்குமோ என்ற கேள்வி பலருக்கும் எழும். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடைபெறாது. ஆரோக்கியத்தில் குழந்தைகள் சிறந்து விளங்கும். மேலும் கனிவான குணத்தோடு தான் குழந்தை இருக்கும்.

இம்மாதத்தில் ஆண், பெண் என எந்த குழந்தை பிறந்தாலும் நல்ல படியாக நம் கைக்கு வர வேண்டும் என நினைத்துக் கொள்ளுங்கள். எல்லா மாதமும், எல்லா நாளும், எல்லா நட்சத்திரமும் சிறப்பான ஒன்று தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். மேலும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் பிறப்பை பொறுத்து கால அளவு, வினைப்பயன், வாழ்க்கை முறை எல்லாம் இறைவன் வகுத்த வண்ணம் தான் நடக்கும் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். மனம் சஞ்சலத்துக்கு ஆளாகாமல் மகிழ்ச்சியாக குழந்தை பிறப்பை கொண்டாடுங்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News