5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vinayagar Chaturthi: விநாயகர் சிலை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? – வாஸ்து டிப்ஸ் இதோ!

விநாயகர் வீதி முதல் கோயில் வரை குடிகொண்டுள்ளார். அத்தகைய விநாயகப்பெருமான் அவதரித்த தினமாக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் இப்பண்டிகை கொண்டாடப்படும். இந்நாள் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வருகிறது. அன்றைய நாள் வீட்டில் பலரும் விநாயகர் சிலை வாங்கி வைத்து வழிபாடு செய்வார்கள்.

Vinayagar Chaturthi: விநாயகர் சிலை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? – வாஸ்து டிப்ஸ் இதோ!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 05 Sep 2024 21:00 PM

விநாயகர் சதுர்த்தி: நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் என்ன விஷயம் செய்தாலும் கடவுள் வழிபாடு இல்லாமல் செய்வதில்லை. அதிலும் முழுமுதற் கடவுளாக கொண்டாடப்படும் விநாயகரை வேண்டிக்கொண்டு எந்த விஷயம் செய்தாலும் வழிகளில் இருக்கும் தடைகள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கையாகும். அதனால் தான் விநாயகர் வீதி முதல் கோயில் வரை குடிகொண்டுள்ளார். அத்தகைய விநாயகப்பெருமான் அவதரித்த தினமாக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் இப்பண்டிகை கொண்டாடப்படும். இந்நாள் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வருகிறது. அன்றைய நாள் வீட்டில் பலரும் விநாயகர் சிலை வாங்கி வைத்து வழிபாடு செய்வார்கள். தொடர்ந்து அதனை விநாயகர் சதுர்த்தி நாளில் இருந்து ஒற்றைப்படையில் வரும் தினத்தில் கொண்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

Also Read: Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி சிலை வழிபாடு.. மறக்காமல் இதை ஃபாலோ பண்ணுங்க!

இதில் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது தவறில்லை. ஆனால் அதில் சரியான வாஸ்து சாஸ்திர விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். எப்போதும் வீட்டின் பிரதான நுழைவாயிலில் விநாயகப் பெருமானின் சிலையை வைக்க வேண்டும். தினமும் அவரை வழிபட்டால் வீட்டில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கையாகும்.அதேபோல் நம் வீட்டில் ஸ்படிகத்தால் ஆன விநாயகர் சிலையை வைத்தால் அது மிகவும் புண்ணியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் எப்போது விநாயர் சிலையை தனியாக வைக்கக்கூடாது. லட்சுமி, சிவன், முருகன் புகைப்படம் அல்லது சிலைகளை வைத்து வழிபடலாம். அவ்வாறு விநாயகருடன் ஸ்படிக லட்சுமியை வழிபட்டால் செல்வம், நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கும்.

Also Read: Vinayagar Chaturthi 2024: விநாயகர் சதுர்த்தி நாளில் நல்ல நேரம் எப்போது? – என்ன செய்யலாம்?

அதேசமயம் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுபவர்களாக இருந்தால் எப்போதும் உட்கார்ந்த நிலையில் இருக்கு விநாயகரைத் தான் வைக்க வேண்டும். அதேபோல் விநாயகர் சிலையை வீட்டின் கதவுக்கு வெளிப்பகுதியில் வைக்கக் கூடாது. சில இடங்களி நின்ற கோலத்தில் விநாயகர் சிலை வைத்திருப்பதை காணலாம். அப்படி நிறுவ விரும்பினால் அதை உங்கள் அலுவலகத்தில் அல்லது திறந்தவெளி இடத்தில்தான் வைக்க வேண்டும்.

தற்போதைய காலக்கட்டத்தில் விநாயகர் சிலை வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. ஆனால், வீட்டில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் வெண்கல நிற சிலையை நிறுவலாம். அதேசமயம் வெள்ளை நிற சிலை வைத்திருப்பதும் செல்வ வளம் கிட்ட உதவும் என்பது நம்பிக்கையாகும். ஆனால் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வீட்டின் வாசலில் அத்தகைய சிலையை நிறுவக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News