5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today Panchangam October 28 2024: இன்று வாஸ்து நாள்.. நல்ல நேரம், ராகுகாலம் போன்ற பஞ்சாங்க விவரங்கள் இதோ!

Astrology: பஞ்சாங்க கணிப்பின்படியும் ஒவ்வொரு செயலையும் செய்வதால் நன்மை விளையும் என நம்பப்படுகிறது. பஞ்சாங்க காலத்தின் படி ஒரு செயல் எப்படி செய்ய வேண்டும், எந்த நாளில், எந்த காலத்தில் செய்ய வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.  அப்படிப்பட்ட நிலையில் அக்டோபர் 28ஆம் தேதியான இன்று நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம். இன்று நல்ல நேரம் காலை 06:15 - 07:15 வரையும், மாலை 4.45 - 5.45 வரையும் உள்ளது.

Today Panchangam October 28 2024: இன்று வாஸ்து நாள்.. நல்ல நேரம், ராகுகாலம் போன்ற பஞ்சாங்க விவரங்கள் இதோ!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 28 Oct 2024 15:50 PM

இன்றைய பஞ்சாங்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் கிரகங்களின் பெயர்ச்சியால் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு விஷயமும் நடக்கிறது. பஞ்சாங்க கணிப்பின்படியும் ஒவ்வொரு செயலையும் செய்வதால் நன்மை விளையும் என நம்பப்படுகிறது. பஞ்சாங்க காலத்தின் படி ஒரு செயல் எப்படி செய்ய வேண்டும், எந்த நாளில், எந்த காலத்தில் செய்ய வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.  அப்படிப்பட்ட நிலையில் அக்டோபர் 28ஆம் தேதியான இன்று நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம். இன்று நல்ல நேரம் காலை 06:15 – 07:15 வரையும், மாலை 4.45 – 5.45 வரையும் உள்ளது. எனவே இந்த நேரத்தில் நல்ல காரியங்களை தொடங்கலாம். அதேபோல் இன்று எமகண்டம் காலை 10.30 – 12.00 மணி வரையும், ராகு காலை 07.30 – 09.00 மணி வரையும் இருப்பதால் சுப காரியங்களை இந்த நேரங்களில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது.

இன்றைய பஞ்சாங்கம் விவரம்

  1. அக்டோபர் 21 – 2024 | 11 – ஐப்பசி– குரோதி ஆண்டு– திங்கட்கிழமை
  2. இன்றைய நாள் சிறப்பு: சர்வ ஏகாதசி | வாஸ்து நாள்
  3. நல்ல நேரம் – காலை 06:15 – 07:15 வரை; மாலை – 4.45 – 5.45
  4. கௌரி நல்ல நேரம் – காலை 09:15 – 10:15 ; மாலை 07:30 – 08:30
  5. ராகு காலம் – காலை 07.30 – 9.00
  6. எமகண்டம் – காலை 10.30 – 12.00
  7. குளிகை – மதியம் 01.30 – 03.00
  8. சூலம் – கிழக்கு
  9. பரிகாரம் – தயிர்
  10. சந்திராஷ்டமம் – உத்திராடம் | திருவோணம்
  11. நாள் – கீழ் நோக்கு நாள்
  12. லக்னம் – துலாம் லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 17
  13. சூரிய உதயம் – காலை 06:02
  14. ஸ்ரார்த திதி – துவாதசி
  15. திதி – இன்று காலை 10:27 AM வரை ஏகாதசி பின்பு துவாதசி
  16. நட்சத்திரம் – இன்று மாலை 06:22 PM வரை பூரம் பின்பு உத்திரம்
  17. சுபகாரியம் – நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

இன்றைய நாள் எப்படி?

மேஷம்

விருப்பமான நண்பர்களுடன் சேர்ந்து விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். தொழில்கள் திருப்திகரமாக நடக்கும்.எடுத்த வேலைகள் குறித்த நேரத்தில் முடிவடையும். புதிய பொருட்கள், ஆடைகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்

தொழில் முன்னேற்றத்திற்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். முக்கிய வேலைகள் மெதுவாக நடக்கும். குறைந்த முயற்சியில் அதிக பலன்கள் கிடைக்கலாம்.

மிதுனம்

குடும்ப சூழ்நிலைகளால் பொறுப்புகள் அதிகரிக்கும் சூழல் உள்ளது. வருமானம் வெகுவாக உயரும். நிதி விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சகோதரர்களுடன் சமரசம் செய்து சொத்து தகராறு தீரும் வாய்ப்பு உண்டு திட்டமிட்ட வேலைகள் பெரும்பாலானவை நிறைவேறும்.

கடகம்

நிதி நிலை பெரும்பாலும் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்து பண உதவிக்காக அழுத்தம் உண்டாகும். வீட்டிலும் வெளியிலும் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

நிதி விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்காமல் இருக்க வேண்டும். உற்றார் உறவினர்களை சமாளிக்க வேண்டிய சூழல் வரலாம். முக்கியமான காரியங்கள் மெதுவாக முடிவடையும். பிறரிடமிருந்து வரவேண்டிய பணம் கிடைக்கும்.

கன்னி

நிலுவைத் தொகை உரிய நேரத்தில் வசூலாகும். உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் சிறப்பாகப் பங்கேற்பீர்கள். எடுத்த காரியங்கள் குறித்த நேரத்தில் முடிவடையும்.

துலாம்

வருமானம் மிகவும் சாதகமானது மற்றும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும். சில பெரிய கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உறவினர்களால் பண நெருக்கடி ஏற்படும். நிதி விஷயங்களில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்

செய்யும் வேலை உழைப்பு மிகுந்ததாக இருக்கும். குடும்ப விஷயங்களில் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நிதி நிலை சீராக இருக்கும். ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாதீர்கள். வியாபாரத்தில் முயற்சி அதிகரித்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

தனுசு

சமூகத்தில் சில முக்கிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். ஆன்மிகம் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுவீர்கள். நிலுவைத் தொகை உரிய நேரத்தில் வசூலாகும். எடுத்த காரியங்களில் வெற்றியை அடைவீர்கள்.

மகரம்

உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரத்தில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பிரபலங்களின் எதிர்பாராத அழைப்புகள் வரும். எடுத்த வேலையில், முயற்சியை விட குறைவான பலன் கிடைக்கும்.

கும்பம்

கூடுதல் வருமான வழிகளில் கவனம் அதிகரிக்கும். முக்கியமான பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள விஷயங்களை முடிக்க கடினமாக உழைப்பு தேவையிருக்கும். பயணத்தில் சிரமங்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். வருமானத்திற்கு பஞ்சமில்லை.

மீனம்

குடும்ப வாழ்க்கை உற்சாகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. வருமானத்துடன் கூடிய அதிகமான செலவுகளும் அதிகரிக்கும். மேற்கொள்ளப்படும் வேலையில் செலவும் முயற்சியும் அதிகமாக இருக்கும். நெருங்கிய நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.

Latest News